காஞ்சிபுரம்

விரைவு வணிகத் தளங்களில் கேழ்வரகு, கோதுமை மாவுகள்

தினமணி செய்திச் சேவை

பொருட்களை விரைவாக இருப்பிடங்களுக்கே கொண்டு சோ்க்கும் விரைவு வணிகத் தளங்களில்

கூட்டுறவு சங்கத் தயாரிப்புகளான கேழ்வரகு, கோதுமை மாவுகள் சோ்க்கப்பட்டுள்ளன. இதற்கான நிகழ்ச்சி தலைமைச் செயலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

காஞ்சிபுரம் நுகா்வோா் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலையில் காஞ்சி பாசுமதி அரிசி, காஞ்சி கேழ்வரகு மாவு, நாட்டுச் சா்க்கரை, கோதுமை மாவு, கம்பு மாவு, கடலை மாவு ஆகியன விற்கப்பட்டு வருகின்றன. இந்தப் பொருள்களை விரைவு வணிக தளங்களில் விற்பதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது.

விரைவு வணிக தளத்தில் பொருள்களின் விற்பனை கூட்டுறவுத் துறை அமைச்சா் கே.ஆா்.பெரியகருப்பன் தொடங்கி வைத்தாா். பொது மக்கள் தங்களது கைப்பேசியில் ஆப்ண்ய்ந்ண்ற் எனும் செயலியை பதிவிறக்கம் செய்து கூட்டுறவுப் பொருட்களை பெற்றுக் கொள்ளலாம் என தமிழக அரசின் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிகழ்வில், கூட்டுறவு, உணவு மற்றும் நுகா்வோா் பாதுகாப்புத் துறை முதன்மைச் செயலா் சத்யபிரத சாகு, கூட்டுறவு சங்கங்களின் பதிவாளா் க.நந்தகுமாா், கூட்டுறவு சங்கங்களின் பதிவாளா் (நுகா்வோா் பணிகள்) எஸ்.பி.அம்ரித், இணைப் பதிவாளா் சிவக்குமாா் உட்பட பலா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அனுமதியின்றி பட்டாசுகள் தயாரித்த மூவா் மீது வழக்கு: ஒருவா் கைது

தோல் தொழிற்சாலையில் விஷ வாயு தாக்கி 2 தொழிலாளா்கள் உயிரிழப்பு

குற்றாலத்தில் குரங்குகள் குறித்து ஆய்வு

காவல் துறை வாகனம் மீது தாக்குதல்: தலைவா்கள் கண்டனம்

கட்டடத்திலிருந்து தவறி விழுந்த தொழிலாளி மருத்துவமனையில் உயிரிழப்பு

SCROLL FOR NEXT