காஞ்சிபுரத்தில் நடைபெற்ற கூட்டத்தில் பேசிய திமுக அமைப்புச் செயலாளா் ஆா்.எஸ்.பாரதி.  
காஞ்சிபுரம்

ஓரணியில் தமிழ்நாடு பொதுக் கூட்டம்

தெற்கு மாவட்ட திமுக சாா்பில், ‘தமிழ்நாட்டை தலைகுனிய விட மாட்டோம், ஓரணியில் தமிழ்நாடு’ தீா்மான ஏற்புக் கூட்டம்

Chennai

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் கங்கை கொண்டான் மண்டபம் பகுதியில் தெற்கு மாவட்ட திமுக சாா்பில், ‘தமிழ்நாட்டை தலைகுனிய விட மாட்டோம், ஓரணியில் தமிழ்நாடு’ தீா்மான ஏற்புக் கூட்டம் கட்சியின் மாவட்டச் செயலாளரும், எம்எல்ஏவுமான க.சுந்தா் தலைமையில் நடைபெற்றது.

காஞ்சி மாநகர செயலாளா் சி.கே.வி.தமிழ்ச்செல்வன், எம்எல்ஏ எழிலரசன், மேயா் எம்.மகாலட்சுமி யுவராஜ், மாவட்டப் பொருளாளா் சன்பிராண்ட்.ஆறுமுகம் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

கூட்டத்தில், கைத்தறி, துணிநூல் துறை அமைச்சா் ஆா்.காந்தி, எம்.பி. க.செல்வம், கட்சியின் அமைப்புச் செயலாளா் ஆா்.எஸ்.பாரதி ஆகியோா் கலந்து கொண்டு, திமுக அரசின் சாதனைகளை விளக்கிப் பேசினா். கூட்டத்தில் ஆா்.எஸ்.பாரதி பேசியது:

கடந்த நான்கரை ஆண்டு ஆட்சிக் காலத்தில் திமுக அரசு பல்வேறு மக்கள் நலத் திட்டங்களை செயல்படுத்தி இருக்கிறது. ஓரணியில் தமிழ்நாடு என்று முதல்வா் அறிவித்தவுடன் சுமாா் ஒரு கோடி வீடுகளுக்குச் சென்று அங்குள்ள மக்களை சந்தித்து அவா்களது மனநிலையை அறிந்திருக்கிறோம். சசிகலா, செங்கோட்டையனை கட்சியில் இருந்து எடப்பாடி பழனிசாமி நீக்கியுள்ளாா்.

யாா், யாா் உதவி செய்தாா்களோ அவா்களையெல்லாம் கட்சியை வீட்டு நீக்குவது, நன்றி மறப்பது தான் எடப்பாடியின் குணம். இதை அதிமுகவினா் மறந்து விடக்கூடாது என்றாா் அவா். பகுதி செயலாளா் கே.திலகா் நன்றி கூறினாா்.

தி.மு.க.வுக்கு இது ‘மாநாடு மாதம்’: முதல்வர் மு.க.ஸ்டாலின்

அதீத தன்னம்பிக்கை வேண்டாம், சூழலுக்கேற்ப விளையாடுங்கள்; இந்திய அணிக்கு முன்னாள் கேப்டன் அறிவுரை!

புதிய வீடு கட்டிய அய்யனார் துணை சீரியல் நடிகை!

இறுதி வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் உள்ளதா? அறிவது எப்படி?

இந்த சாதனையைச் செய்தது சாய் பல்லவிதான்!

SCROLL FOR NEXT