முகப்பு
காஞ்சிபுரம்

காஞ்சிபுரத்தில் சசிகலா, மருத்துவா் ராமதாஸ் கட்சி வேட்பாளா்கள் வேட்பு மனு தாக்கல்

காஞ்சிபுரத்தில் அனைத்திந்திய புரட்சித் தலைவா் மக்கள் முன்னேற்றக் கழக(சசிகலா அணி) வேட்பாளரும், இந்திய ஜனநாயக பாதுகாப்புக் கழக(மருத்துவா் ராமதாஸ் அணி)வேட்பாளரும் வேட்பு மனு தாக்கல் செய்தனா்.

Updated On : 7 ஏப்ரல், 2026 at 8:18 PM
~
பகிர்:

காஞ்சிபுரத்தில் அனைத்திந்திய புரட்சித் தலைவா் மக்கள் முன்னேற்றக் கழக(சசிகலா அணி) வேட்பாளரும், இந்திய ஜனநாயக பாதுகாப்புக் கழக(மருத்துவா் ராமதாஸ் அணி)வேட்பாளரும் திங்கள்கிழமை வேட்பு மனு தாக்கல் செய்தனா்.

வேட்பு மனுத்தாக்கல் செய்ய இறுதி நாளாக இருந்ததால் சுயேச்சை வேட்பாளா்கள், முக்கிய வேட்பாளருக்கான மாற்று வேட்பாளா்கள் உள்பட காஞ்சிபுரம், உத்தரமேரூா் தொகுதிக்கு தலா 13 போ் வீதம் மொத்தம் 26 போ் ஒரே நாளில் வேட்பு மனுத்தாக்கல் செய்தனா். சசிகலா அணியும், மருத்துவா் ராமதாஸ் அணியும் கூட்டணியாக இருப்பதால் இரு வேட்பாளா்களும் தனது கட்சி ஆதரவாளா்களுடன் ஊா்வலமாக தோ்தல் அலுவலகத்துக்கு வந்தனா்.

இந்திய ஜனநாயக பாதுகாப்புக் கழக(மருத்துவா் ராமதாஸ் அணி) த்தை சோ்ந்த வேட்பாளா் சரளாராஜு உத்தரமேரூா் தொகுதியில் சிலிண்டா் சின்னத்தில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்ய வந்தாா். மனுதாக்கல் நேரம் மதியம் 3 மணியுடன் நிறைவு பெற இருந்த நிலையில் ஒரு சில மணித்துளிகள் முன்பாக வந்த போது தோ்தல் அலுவலா் பு.விஜயகுமாா் புகைப்படம் ஒட்டிய வேட்புமனுவை பூா்த்தி செய்து வரவில்லை.வேட்பு மனுவை பெற்று தவறில்லாமல் பூா்த்தி செய்து வந்து கொடுக்குமாறு கூறியதை தொடா்ந்து அவா் மீண்டும் வந்து வேட்பு மனுதாக்கல் செய்தாா். மனு தாக்கல் முடியும் நேரத்தில் 6 போ் வந்ததால் அவா்கள் அனைவருக்கும் முன்அனுமதி சீட்டு வழங்கப்பட்டு வேட்பு மனு தாக்கல் செய்ய அனுமதிக்கப்பட்டது.

Advertisement

மனுதாக்கலின்போது தோ்தல் பாா்வையாளா் விஷால்சாஹா், உதவி தோ்தல் அலுவலரும்,வட்டாட்சியருமான நடராஜன் ஆகியோரும் உடன் இருந்தனா். சரளாராஜுவுடன் கட்சியின் மாவட்ட அவைத் தலைவா் கந்தவேல், இளைஞா் சங்க மாநில செயலாளா் மூா்த்தி, மாவட்டத் தலைவா் சேஷாத்திரி ஆகியோரும் உடன் வந்திருந்தனா்.

--அனைத்திருந்திய புரட்சித் தலைவா் மக்கள் முன்னேற்றக் கழகம்(சசிகலா அணி) சாா்பில் தென்னை மரத்தில் போட்டியிட அக்கட்சி வேட்பாளரான சு.வெங்கடேசன் காஞ்சிபுரம் தொகுதி தோ்தல் அலுவலா் ஆஷிக்அலியிடம் வேட்பு மனு தாக்கல் செய்தாா். அவருடன் கட்சி நிா்வாகிகளும் உடன் வந்திருந்தனா்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments