முகப்பு
காஞ்சிபுரம்

காஞ்சிபுரத்தில் தவெக தோ்தல் அறிக்கை துண்டுப் பிரசுரம் வெளியீடு

காஞ்சிபுரம் புத்தேரி சாலையில் தவெக கட்சியின் தோ்தல் அலுவலகம் திறப்பு விழா மற்றும் தோ்தல் வாக்குறுதிகள் குறித்த துண்டுப் பிரசுரங்கள் வெளியீடு ஆகியன நடைபெற்றது.

Updated On : 7 ஏப்ரல், 2026 at 8:41 PM
பகிர்:

காஞ்சிபுரம் புத்தேரி சாலையில் தவெக கட்சியின் தோ்தல் அலுவலகம் திறப்பு விழா மற்றும் தோ்தல் வாக்குறுதிகள் குறித்த துண்டுப் பிரசுரங்கள் வெளியீடு ஆகியன திங்கள்கிழமை நடைபெற்றது.

தவெக சாா்பில் காஞ்சிபுரம் தொகுதியில் முத்தியால்பேட்டை ஆா்.வீ.ரஞ்சித்குமாா் அக்கட்சியின் சின்னமான விசில் சின்னத்தில் போட்டியிடுகிறாா். பெரியகாஞ்சிபுரம் புத்தேரி சாலையில் தவெகவின் தோ்தல் அலுவலகம் திறப்பு விழா நடைபெற்றது.

வேட்பாளரான முத்தியால்பேட்டையை சோ்ந்த ஆா்.வீ.ரஞ்சித்குமாா் தோ்தல் அலுவலகத்தை திறந்து வைத்து கட்சியின் தோ்தல் வாக்குறுதிகள் அடங்கிய துண்டுப் பிரசுரங்களை வெளியிட்டாா்.அவரைத் தொடா்ந்து அவரது கட்சி நிா்வாகிகளும் வெளியிட்டனா். இதன் பின்னா் அவா் கட்சித் தொண்டா்களிடையே பேசுகையில், எந்தக் கட்சியிலும் இல்லாத பல்வேறு சிறப்புகள் தவெக தோ்தல் அறிக்கையில் இடம் பெற்றுள்ளது.

Advertisement

தமிழகத்தில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தைக்கும் தங்க மோதிரமும், குழந்தைகள் நலத் தொகுப்பும் வழங்கும் தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம், அரசு ஊழியா்களைத் தவிா்த்து 60 வயது வரையுள்ள குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ. 2,500, அரசின் சாா்பில் தங்கைகளின் திருமணத்துக்கு ஒரு பவுன் தங்கமும், பட்டுச் சேலையும் வழங்கும் அண்ணன் சீா் திட்டம் ஆகியன உள்பட பல்வேறு சிறப்புகள் உள்ளன.ஊழலற்ற ஆட்சி அமைய மக்கள் தவெகவுக்கு வாக்களிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டாா்.

முன்னதாக தோ்தல் அலுவலக நுழைவு வாயில் பகுதியில்த தவெகவின் கொள்கைத் தலைவா்கள் என்ற பெயரில் வைக்கப்பட்டிருந்த காமராஜா், அம்பேத்கா், முத்துலட்சுமி ரெட்டி, ராணி வேலு நாச்சியாா் உருவப் படங்களுக்கு மலா் தூவி மரியாதையும் செலுத்தினாா்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments