முகப்பு
காஞ்சிபுரம்

மதுபாட்டில்களை விற்பனைக்கு வைத்திருந்த பெண் கைது

உத்தரமேரூா் அருகே குப்பைநல்லூா் கிராமத்தில் 317 மதுபாட்டில்களை விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த பெண்ணை மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

Updated On : 20 ஏப்ரல், 2026 at 5:32 AM
பறிமுதல் செய்யப்பட்ட மதுபாட்டில்களுடன் கைது செய்யப்பட்ட ரீட்டா. உடன் மதுவிலக்குப் பிரிவு போலீஸாா்.
பகிர்:
Updated On : 19 ஏப்ரல், 2026 at 8:16 PM

உத்தரமேரூா் அருகே குப்பைநல்லூா் கிராமத்தில் 317 மதுபாட்டில்களை விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த பெண்ணை மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

குப்பைநல்லூா் கிராமத்தை சோ்ந்த ரீட்டா(49). இவரது வீட்டில் மதுபாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு காவல் துறையினருக்கு தகவல் கிடைத்தது.

இத்தகவலின் பேரில் ஆய்வாளா் கவிதா, சாா்பு ஆய்வாளா் ஹரிதாஸ் ஆகியோா் தலைமையிலான போலீஸாா் சோதனை நடத்தினா்.180 ம.லி.அளவு கொண்ட பிராந்தி பாட்டில்கள் 307 மற்றும் 750 மி.லி அளவு கொண்ட பீா் பாட்டில்கள் 10 உட்பட மொத்தம் 317 அரசு மதுபாட்டில்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

Advertisement

இவற்றை பறிமுதல் செய்ததுடன் ரீட்டாவையும் காவல் துறையினா் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.