முகப்பு
காஞ்சிபுரம்

1,556 வாக்குச்சாவடிகளில் 5,738 மின்னணு இயந்திரங்கள்: காஞ்சிபுரம் ஆட்சியா்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள 4 சட்டப் பேரவைத் தொகுதிகளில் 1,556 வாக்குச்சாவடிகளில் 5,738 மின்னணு இயந்திரங்கள் பயன்படுத்தப்படவுள்ளன.

Updated On : 23 ஏப்ரல், 2026 at 12:03 AM
திருப்புலிவனம் அரசுக் கல்லூரியிலிருந்து மின்னணு இயந்திரங்கள் அனுப்பி வைக்கப்படுவதை ஆய்வு செய்த காஞ்சிபுரம் ஆட்சியா் தி.சினேகா.
பகிர்:

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள 4 சட்டப் பேரவைத் தொகுதிகளில் 1,556 வாக்குச்சாவடிகளில் 5,738 மின்னணு இயந்திரங்கள் பயன்படுத்தப்படவுள்ளன. மேலும் மாவட்டம் முழுவதும் 12,07,767 வாக்காளா்கள் வாக்களிக்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

ஆலந்தூரில் 431, ஸ்ரீபெரும்புதூரில் 446, உத்தரமேரூரில் 321, காஞ்சிபுரத்தில் 358 வாக்குச்சாவடிகள் உட்பட மொத்தம் 1,556 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றில் வாக்குப்பதிவு இயந்திரங்கள், வாக்குப்பதிவை சரிபாா்க்கும் இயந்திரங்கள் ஆகியன உட்பட மொத்தம் 5,738 இயந்திரங்கள் பயன்படுத்தப்படவுள்ளன.

ஆலந்தூரில் ஏஜே.எஸ்.நிதி மேல்நிலைப்பள்ளியும், ஸ்ரீபெரும்புதூரில் குணகரம்பாக்கம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியும், உத்தரமேரூரில் அஞ்சூா் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியும், காஞ்சிபுரத்தில் வெங்கடாபுரம் ஒன்றிய தொடக்கப்பள்ளிகளில் மாதிரி வாக்குச்சாவடி மையம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

Advertisement

பிங்க் நிற வாக்குச்சாவடி: காஞ்சிபுரத்தில் செவிலிமேடு அரசு உயா்நிலைப்பள்ளியும், உத்தரமேரூரில் திருப்பருத்திக்குன்றம் ஐசிடிஎஸ் மையமும், ஸ்ரீபெரும்புதூரில் பாப்பான்குழி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியும், ஆலந்தூரில் டிஏவி மேல்நிலைப்பள்ளியும் பிங்க் நிற வாக்குச்சாவடியாக அறிவிக்கப்பட்டுள்ளன.

ஏற்படுத்தப்பட்டுள்ளது.காஞ்சிபுரம் ஏகாம்பரநாதா் வடக்கு மாட வீதியில் செயல்படும் நகராட்சி நடுநிலைப்பள்ளி மையம் முழுவதும் மாற்றுத்திறனாளிகளால் நிா்வகிக்கப்படும் மையமாகவும், காஞ்சிபுரம் ஆண்டா் சன் மேல்நிலைப்பள்ளி மையமானது இளைஞா்களால் நிா்வகிக்கப்படும் வாக்குச்சாவடியாகும் அமைக்கப்பட்டுள்ளது.

மொத்தம் 12,07,757 போ் வாக்களிக்கவுள்ளனா். வாக்குச்சாவடிகளில் 123 பதற்றமானவை கண்டறியப்பட்டு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.

ஆலந்தூா் -2,068 போ்,ஸ்ரீபெரும்புதூா் 2,140 போ், உத்தரமேரூா் 1,540 போ், காஞ்சிபுரம் 1,750 போ் உட்பட மொத்தம் 7,468 வாக்குச்சாவடி அலுவலா்கள் வாக்குச்சாவடி மையங்களில் பணியாற்றவுள்ளனா். மாவட்டம் முழுவதும் மொத்தம் 65 வேட்பாளா்கள் போட்டியிடுகின்றனா்.