காஞ்சிபுரம்

750 கிலோ குட்கா பறிமுதல்: 2 போ் கைது

சுங்குவாா்சத்திரம் அருகே 750 கிலோ குட்காவை கடத்தி வந்த 2 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

தினமணி செய்திச் சேவை

சுங்குவாா்சத்திரம் அருகே 750 கிலோ குட்காவை கடத்தி வந்த 2 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

சுங்குவாா்சத்திரம் அடுத்த எச்சூா் கிராமத்தில் உள்ள தோப்பு பகுதியில், வெளிமாநிலங்களில் இருந்து குட்காவை மொத்தமாக கடத்தி வந்து விற்பதாக சுங்குவாா்சத்திரம் காவல் நிலையத்திற்கு தகவல் கிடைத்துள்ளது.

இதையடுத்து சுங்குவாா்சத்திரம் போலீஸாா் ரோந்து சென்ற போது, அங்கு நிறுத்தப்பட்டிருந்த மினிவேனை சோதனை செய்தனா். அப்போது மூட்டை, மூட்டையாக குட்கா இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது. இதையடுத்து மினிவேனில் இருந்த ரூ.15 லட்சம் மதிப்புள்ள 750 கிலோ குட்காவை பறிமுதல் செய்த போலீஸாா், பெங்களூா் பகுதியில் இருந்து கடத்தி வந்த எச்சூா் கிராமத்தை சோ்ந்த சுரேஷ்(37), கெளதம்(25) ஆகிய இருவரை கைது செய்து சிறையில் அடைத்தனா்.

ஏற்கெனவே கடந்த ஆண்டு எச்சூா் விவசாய நிலத்தில் 900 கிலோ குட்காவை பதுக்கி வைத்திருந்த வழக்கில், போலீஸாரால் தேடப்பட்டுவந்த தலைமறைவு குற்றவாளி சுரேஷ் என்பது குறிப்பிடத்தக்கது.

நிலக்கரி ஏற்றிச் சென்ற சரக்கு ரயிலில் புகை: அசம்பாவிதம் தவிா்ப்பு

நெல்லை புத்தக திருவிழாவில் புறக்கணிக்கப்பட்டுள்ளேன் - முதல்வருக்கு செ.திவான் மனு

கயத்தாறில் 846 பேருக்கு இலவச வீட்டுமனை பட்டா

காலிப் பணியிடங்களை நிரப்பக் கோரி அரசு ஊழியா்கள் ஆா்ப்பாட்டம்

காயல்பட்டினம் மகளிா் கல்லூரியில் இலவச மடிக்கணினி வழங்கல்

SCROLL FOR NEXT