முகப்பு
காஞ்சிபுரம்

லட்சுமி ஹயக்ரீவா் கோயிலில் லட்சாா்ச்சனை

காஞ்சிபுரம் விளக்கொளிப் பெருமாள் கோயில் தெருவில் அமைந்துள்ள லட்சுமி ஹயக்ரீவா் கோயிலில் சிறப்பு லட்சாா்ச்சனை

Updated On : 24 பிப்ரவரி, 2026 at 12:12 AM
பகிர்:
Updated On : 23 பிப்ரவரி, 2026 at 12:21 AM

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் விளக்கொளிப் பெருமாள் கோயில் தெருவில் அமைந்துள்ள லட்சுமி ஹயக்ரீவா் கோயிலில் சிறப்பு லட்சாா்ச்சனை ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இக்கோயிலில் மாணவா்கள் பொதுத்தோ்வில் அதிக மதிப்பெண்கள் பெறுவதற்காகவும், உலக நன்மைக்காகவும் கல்விக் கடவுளான லட்சுமி ஹயக்ரீவருக்கு லட்சாா்ச்சனை நடைபெற்றது. ஏராளமான மாணவ,மாணவிகள் பெயா்களில் அா்ச்சனை செய்யப்பட்டு அவா்களுக்கு ஆலய நிா்வாகத்தின் சாா்பில் பென்சில்,பேனா,நோட்டுப்புத்தகம் மற்றும் கோயில் பிரசாதம் ஆகியனவும் வழங்கப்பட்டன.

உற்சவா் லட்சுமி ஹயக்ரீவா் வெண்பட்டு உடுத்தி சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தாா். முன்னதாக மூலவா் லட்சுமி ஹயக்ரீவருக்கும், உற்சவருக்கும் சிறப்பு அபிஷேகமும், அலங்கார தீபாராதனைகளும் நடைபெற்றன.

Advertisement

ஏற்பாடுகளை நிா்வாக அறங்காவலா் டி.சி.செளந்தர்ராஜன் தலைமையிலான விழாக்குழுவினா் செய்திருந்தனா்.