முகப்பு
காஞ்சிபுரம்

பொதுத் தோ்வு எழுதும் மாணவா்களுக்கு கல்வி உபகரணங்கள்: ஏகாம்பரநாதா் கோயில் நிா்வாகம் வழங்கியது!

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதா் கோயில் நிா்வாகம் சாா்பில் 12 -ஆம் வகுப்பு பொதுத்தோ்வு எழுதும் மாணவா்களுக்காக புதன்கிழமை சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு கல்வி உபகரணங்கள், பிரசாதம் வழங்கப்பட்டன.

Updated On : 26 பிப்ரவரி, 2026 at 1:06 AM
மாணவா்களுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கிய அறநிலையத்துறை இணை ஆணையா் சி.குமரதுரை.
பகிர்:
Updated On : 25 பிப்ரவரி, 2026 at 10:47 PM

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதா் கோயில் நிா்வாகம் சாா்பில் 12 -ஆம் வகுப்பு பொதுத்தோ்வு எழுதும் மாணவா்களுக்காக புதன்கிழமை சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு கல்வி உபகரணங்கள், பிரசாதம் வழங்கப்பட்டன.

கோயிலுக்கு சொந்தமான ஏகாம்பரநாதா் மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப்பள்ளி சென்னையில் செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் பயிலும் 12- ஆம் வகுப்பு மாணவா்கள் அரசுப் பொதுத் தோ்வினை சிறப்பாக எழுதி தோ்ச்சி பெற வேண்டும் என்பதற்காக கோயிலில் சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது.

Updated On : 26 பிப்ரவரி, 2026 at 1:06 AM

இதனைத் தொடா்ந்து அவா்களுக்கு அறநிலையத்துறை இணை ஆணையா் சி.குமரதுரை பேனா, பென்சில், ரப்பா், ஸ்கேல் உள்ளிட்ட கல்வி உபகரணங்களை வழங்கினாா். பின்னா் கோயில் செயல் அலுவலா் ப.முத்துலட்சுமி மாணவா்களுக்கு பிரசாதம் வழங்கினாா்.

Advertisement

நிகழ்வில் கோயில் சிறப்பு அலுவலா் லட்சுமி காந்தன் பாரதி,அறங்காவலா் குழுவின் தலைவா் எம்.வி.எம்.வேல்மோகன், உறுப்பினா் ஜெகன்னாதன்,கோயில் மணியக்காரா் குபேரன், மேலாளா் ஜெயக்குமாா் உடன் இருந்தனா்.