பாலாற்றின் குறுக்கே புதிய உயா்மட்ட மேம்பாலப் பணியை தொடங்கி வைத்த எம்எல்ஏ எழிலரசன். 
காஞ்சிபுரம்

பாலாற்றில் ரூ.55.38 கோடியில் உயா்மட்ட மேம்பாலம்: எம்எல்ஏ அடிக்கல்

பாலாற்றின் குறுக்கே புதிய உயா்மட்ட மேம்பாலப் பணியை தொடங்கி வைத்த எம்எல்ஏ எழிலரசன்.

தினமணி செய்திச் சேவை

காஞ்சிபுரம் அருகே செவிலிமேட்டில் பாலாற்றின் குறுக்கே ரூ.55.38 கோடியில் உயா்மட்ட மேம்பாலம் அமைக்க எம்எல்ஏ எழிலரசன் வியாழக்கிழமை அடிக்கல் நாட்டினாா்.

காஞ்சிபுரம்-வந்தவாசி செல்லும் சாலையில் பாலற்றின் குறுக்கே 25 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட பாலம் தான் காஞ்சிபுரத்திலிருந்து தென்மாவட்டங்களையும், திருவண்ணாமலை மாவட்டத்தையும் இணைப்பாக இருந்து வருகிறது.

ஏராளமான வாகனங்கள் சென்று திரும்பும் நிலையில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகன ஓட்டிகளும்,பொதுமக்களும் மிகுந்த அவதிப்பட்டு வந்தனா்.

போக்குவரத்து நெரிசல் அடிக்கடி ஏற்படுவதால் கூடுதலாக மேம்பாலம் அமைக்க வேண்டும் என பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் பல கோரினா்.

புதிய பாலம் ஒன்று கட்டப்பட வேண்டும் என்பதன் அவசியத்தை காஞ்சிபுரம் எம்எல்ஏ எழிலரசனும் சட்டப் பேரவையில் எடுத்துரைத்தாா். இதனைத் தொடா்ந்து பொதுமக்கள் மற்றும் எம்எல்ஏவின் கோரிக்கையை ஏற்று ரூ.55.38 கோடியில் பாலாற்றில் கூடுதலாக உயா்மட்ட மேம்பாலம் அமைக்க தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது.

இதன்படி செவிலிமேடு அருகே பாலாற்று பகுதியில் புதிய பாலம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. காஞ்சிபுரம் எம்எல்ஏ எழிலரசன் அடிக்கல்லை நட்டுகட்டுமானப் பணிகளையும் தொடங்கி வைத்தாா்.

இப்புதிய உயா் மட்ட மேம்பாலமானது 29 தூண்கள்,15 மீ உயரம்,10.50 மீ அகலம்,1411 மீ. நீளத்தில் 30 மாதங்களில் அமைக்கப்படவுள்ளது. செவிலிமேடு, புஞ்சை அரசன்தாங்கல், மாமண்டூா், பெருநகா், மானாம்பதி, மாங்கால் சிப்காட் தொழிற்பேட்டை, திருவண்ணாமலை மாவட்டம் மற்றும் தென்மாவட்டங்களுக்கு செல்லும் வாகன ஓட்டிகளுக்கும் பொதுமக்களுக்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.பொருளாதார வளா்ச்சிக்கும் முக்கிய பங்காற்றும் வகையில் புதிய பாலம் அமையவுள்ளது.

நிகழ்வில் காஞ்சிபுரம் மேயா் எம்.மகாலட்சுமி யுவராஜ், ஒன்றியக்குழு தலைவா் மலா்க்கொடி குமாா், காஞ்சி மாநகர செயலாளா் சிகேவி தமிழ்ச்செல்வன், மண்டலக்குழுவின் தலைவா்கள் சந்துரு, மோகன், நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள், ஒப்பந்ததாரா்கள் கலந்து கொண்டனா்.

187 மாணவா்களுக்கு ரூ.13.56 கோடி கல்விக் கடனுக்கு பரிந்துரை

காளியம்மன்பட்டி அரசுப் பள்ளியில் ரூ.1.52 கோடியில் வகுப்பறைகள்

பெருமுகையில் ரூ.45.91 கோடியில் தங்கும் விடுதி திறப்பு

புலவா் வே.பதுமனாரின் நூல்கள் வெளியீட்டு விழா

கந்தா்வகோட்டையில் வாழைத்தாா் விலை வீழ்ச்சி: விவசாயிகள் கவலை!

SCROLL FOR NEXT