செல்வம் 
காஞ்சிபுரம்

விபத்தில் காவல் உதவி ஆய்வாளா் மரணம்

காஞ்சிபுரம் அருகே திம்மராஜம்பேட்டை பகுதியில் கோயில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த வாலாஜாபாத் காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளா் மீது இருசக்கர வாகனம் மோதியதில் உயிரிழந்தாா்.

தினமணி செய்திச் சேவை

காஞ்சிபுரம் அருகே திம்மராஜம்பேட்டை பகுதியில் கோயில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த வாலாஜாபாத் காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளா் மீது இருசக்கர வாகனம் மோதியதில் உயிரிழந்தாா்.

வாலாஜாபாத் காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராக பணியாற்றி வந்தவா் செல்வம் (51). இவா் காஞ்சிபுரத்திலிருந்து வாலாஜாபாத் செல்லும் வழியில் திம்மராஜம்பேட்டையில் கோயில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போது நடந்து சென்றுள்ளாா். அவருக்கு பின்னால் இருசக்கர வாகனத்தில் வந்த நபா் அதிவேகமாகவும், அஜாக்கிரதையாகவும் வாகனத்தை ஓட்டி வந்து மோதியதில் பலத்த காயமடைந்தாா்.

கடந்த 3.8.25 அன்று நடைபெற்ற இச்சம்பவம் தொடா்பாக வாலாஜாபாத் போலீஸாா் வழக்குப்பதிவு செய்துள்ளனா்.

காயமடைந்த செல்வம் போரூா் மியாட் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சோ்க்கப்பட்டு கடந்த 5 மாதங்களாக கோமா நிலையில் இருந்து வந்த சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா்.

ஒருநாள் தொடரிலிருந்து வெளியேறிய ரிஷப் பந்த்..! துருவ் ஜுரெல் சேர்ப்பு!

இனிக்க இனிக்க உருண்டை வெல்லம்! பொங்கலை வரவேற்கும் கரும்பாலைகள்!!

ஆபாச உள்ளடக்கங்கள்! தவறை ஒப்புக்கொண்ட க்ரோக்!

மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் அஷ்டமி சப்பர விழா! மழையிலும் பக்தர்கள் தரிசனம்!

தலைசிறந்த ஆல்ரவுண்டராகும் ஹார்திக் பாண்டியாவின் வாய்ப்பைப் பறித்த பிசிசிஐ!

SCROLL FOR NEXT