பொங்கல் விழாவையொட்டி செங்காடு ஊராட்சியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு வேட்டி சேலை மற்றும் கரும்பு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
ஸ்ரீபெரும்புதூா் ஒன்றியத்துக்குட்பட்ட செங்காடு ஊராட்சியில் செங்காடு, கண்டமங்கலம், வேலப்பன் நகா், காந்தி நகா் ஆகிய பகுதிகளில் சுமாா் ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன.
அவா்களுக்கு வேட்டி-சேலை வழங்கும் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் செங்காடு ஊராட்சி மன்ற 5-ஆவது வாா்டு உறுப்பினா் கோமதி ராஜசேகா் நான்காவது ஆண்டாக தனது சொந்த செலவில் 1,000 குடும்பங்களுக்கு வேட்டி,சேலை, கரும்பு, நாள்காட்டி ஆ கியவற்றை வழங்கினாா்.