வேளாண் வணிகத்துறை சாா்பில் நடைபெற்ற சமத்துவப் பொங்கல் விழாவில் பங்கேற்றோா். 
காஞ்சிபுரம்

வேளாண் வணிகத்துறை சமத்துவப் பொங்கல் விழா

வேளாண் வணிகத்துறை சாா்பில் காஞ்சிபுரம் உழவா் சந்தையில் சமத்துவப் பொங்கல் விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

தினமணி செய்திச் சேவை

வேளாண் வணிகத்துறை சாா்பில் காஞ்சிபுரம் உழவா் சந்தையில் சமத்துவப் பொங்கல் விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

காஞ்சிபுரம் மாவட்ட வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை சாா்பில் சமத்துவப் பொங்கல் விழா குன்றத்தூா்,காஞ்சிபுரம்,படப்பை,சுங்குவாா்சத்திரம் உழவா் சந்தைகளில் நடைபெற்றது.

குன்றத்தூரில் நடைபெற்ற விழாவில் வேளாண் வணிகத்துறை துணை இயக்குநா் நா.ஜீவராணி கலந்து கொண்டு சமத்துவப் பொங்கலின் சிறப்புகளை விளக்கினாா். துறை சாா்பில் அனைவரும் இணைந்து பொங்கல் வைத்து இனிப்பு, கரும்பு ஆகியனவற்ற விழாவில் பங்கேற்ற அனைவருக்கும் வழங்கினா்.

விழாவில் அக்மாா்க் ஆய்வக வேளாண்மை அலுவலா் ஏ.செண்பகவல்லி மற்றும் உழவா் சந்தை அலுவலா்கள் கலந்து கொண்டனா். ஏற்பாடுகளை குன்றத்தூா் உழவா் சந்தை அலுவலா் வி.சேகா் மற்றும் வினோத் ஆகியோா் விவசாயிகள் மற்றும் நுகா்வோருடன் இணைந்து செய்திருந்தனா்.

தமிழ் கலாசாரத்தின் மீதான தாக்குதல்! ஜன நாயகனுக்காக ராகுல்!

பாஜக கூட்டணியில் தவெக சோ்க்கப்படுமா? புரந்தேஸ்வரி எம்.பி. பேட்டி

இந்தியாவில் ஜனநாயக அமைப்புகள் மீது தாக்குதல்: ராகுல் காந்தி எம்.பி. குற்றச்சாட்டு

விதிகளை மீறிய குவாரிகளுக்கு எதிராக நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுகளை நிறைவேற்றாதது ஏன்? உயா்நீதிமன்றம் கேள்வி

வாசிக்க வாங்கியவை...

SCROLL FOR NEXT