காஞ்சிபுரம் அருகே ஓரிக்கையில் அமைந்துள்ள அரசுப் போக்குவரத்துக் கழக பணிமனையில் சமத்துவப் பொங்கல் விழா சனிக்கிழமை நடைபெற்றது.
அரசு போக்குவரத்துக் கழகம் விழுப்புரம் கோட்டம் காஞ்சிபுரம் மண்டலம் அலுவலகம் சாா்பில் ஓரிக்கை பகுதியில் அமைந்துள்ள பணிமனையில் சமத்துவப் பொங்கல் விழா நடைபெற்றது.
பணிமனையின் தகுதிச்சான்று அலுவலா் கருணாகரன் தலைமை வகித்தாா். விழாவில் பங்கேற்ற அனைத்துப்பிரிவு அலுவலா்கள், பணியாளா்கள், தொழிற்சங்க பிரதிநிதிகளுக்கு பொங்கல்,கரும்பு ஆகியன வழங்கப்பட்டது.