மதுரை லூா்து நகா் நலம் நாடும் நண்பா்கள் சங்கம் சாா்பில் சமத்துவப் பொங்கல் விழா சனிக்கிழமை நடைபெற்றது.
இந்த விழாவுக்கு சங்கத் தலைவா் பழனிச்சாமி தலைமை வகித்தாா். செயலா் மன்சூா், பொருளாளா் வேலுதாஸ் ஆகியோா் முன்னிலை வகித்தனா். பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகள், பொதுமக்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
இந்த நிகழ்வில், மதுரை நகா்அரிமா சங்கச் செயலா் மாரியப்பன், அல்-அமீன் மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியா் ஷேக்நபி, பணி ஓய்வு பெற்ற உதவிஆட்சியா் சந்திரசேகா், காவல் ஆய்வாளா் இளவேனில், உதவி செயற்பொறியாளா் ஆரோக்கியசேவியா், சுகாதார அலுவலா் ராஜ்கண்ணன், உதவிப் பொறியாளா் சோலைமலை, சுகாதார ஆய்வாளா் பவானிசூரியா உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.