இந்தோனேசியா பாத்தாம் தீவில் தமிழ்ச் சங்கம் சார்பில் பொங்கல் விழா!
இந்தோனேசியா பாத்தாம் தீவில் தமிழ்ச் சங்கம் சார்பில் தமிழ்நாட்டவர் பங்கேற்புடன் தமிழர் பண்பாடு, பாரம்பரியத்தை வெளிப்படுத்தும் பொங்கல் விழா குறித்து...
வேதாரண்யம்: இந்தோனேசியா பாத்தாம் தீவில் தமிழ்ச் சங்கம் சார்பில் தமிழ்நாட்டவர் பங்கேற்புடன் தமிழர் பண்பாடு, பாரம்பரியத்தை வெளிப்படுத்தும் பொங்கல் விழா நடைபெற்றது.
விழாவில் சிறப்பு விருந்தினராக மேடான் நகரில் அமைந்துள்ள இந்தியத் தூதரகத்தின் கன்சல் ஜெனரல் ரவிசங்கர்கோயல் கலந்துகொண்டு சிறப்பித்தார்.
விழாவின் ஒரு பகுதியாக தமிழர் பாரம்பரிய உணவு முறைகளுடன், கரகம், காவடி, தப்பாட்டம், மயிலாட்டம் உள்ளிட்ட கிராமிய நிகழ்த்து கலைகள், நகைசுவை பட்டிமன்றம் நடைபெற்றது.
Advertisement
Advertisement
தமிழர் பாரம்பரிய விளையாட்டுப் போட்டிகளும் நடைபெற்றன.
இந்த நிகழ்ச்சியில், தமிழகத்திலிருந்து கரகாட்டக் கலைஞர் துர்க்கா,மதுரை முத்து உள்ளிட்ட கலைஞர்கள் பங்கேற்றுடன்.
இவர்களுடன் இந்தோனேசியாவில் வசிக்கும் தமிழர் குடும்பத்தாரும் கலை நிகழ்ச்சிகளில் பங்கேற்று பொங்கல் கொண்டாடினர்.
Pongal festival on behalf of Tamil Sangam on Batam Island, Indonesia
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.