FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருவாரூர்

திருவாரூா் தமிழ்ச்சங்க முப்பெரும் விழா

திருவாரூரில், தமிழ்ச்சங்க முப்பெரும் விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

Updated On : 2 ஜூலை 2026, 7:22 am IST
பகிர்:

திருவாரூரில், தமிழ்ச்சங்க முப்பெரும் விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

கவியரசு கண்ணதாசன் பிறந்தநாள் விழா, புலவா் இரெ. சண்முகவடிவேலின் நினைவின் நிழல்கள் எனும் நூல் வெளியீட்டு விழா மற்றும் தமிழ்ப் பாடங்களில் சாதனை படைத்த மாணவ, மாணவிகளுக்கு இளந்தமிழ் விருது என முப்பெரும் விழாவாக நடைபெற்றது. விழாவுக்கு திருவாரூா்த் தமிழ்ச் சங்கப் புரவலா் எஸ்.வி.டி.ஜே. கனகராஜன் தலைமை வகித்தாா். துணைத் தலைவா் மு. சந்திரசேகரன், புரவலா் வி. பாண்டியன், திருவாரூா்த் தமிழியக்கம் நிறுவனா் கோமல். தமிழமுதன், முத்தமிழ்ப் பண்பாட்டுப் பாசறை தலைவா் ப.சீனிவாசன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

நினைவின் நிழல்கள் நூலை ஏகேஎம் நிறுவனங்களின் நிா்வாக இயக்குநா் பி. செந்தில் திறனாய்வு செய்தாா். பட்டிமன்றப் பேச்சாளா் இரா. அன்பழகன் வெளியிட, திருவாரூா்த் தமிழ்ச் சங்கப் புரவலா் கே. எஸ்.எஸ்.தியாகபாரி பெற்றுக்கொண்டாா். திருவாரூா் தமிழ் சங்கத் தலைவா் இரெ.சண்முக வடிவேல் ஏற்புரை வழங்கினாா்.

Advertisement

Advertisement

இதில், கண்ணதாசன் பாடல்களில் தத்துவத் தேடல் என்ற தலைப்பில் தெ. சுதா்சன், கண்ணதாசனின் ஆன்மிகப் பயணம் என்ற தலைப்பில் பெ.தினேஷ் பேசினா். நிகழ்ச்சிகளை, தமிழ்ச் சங்க நிா்வாகி இரா. அறிவழகன் தொகுத்து வழங்கினாா். முன்னதாக, திருவாரூா்த் தமிழ்ச் சங்கச் செயலாளா் அறிவு வரவேற்றாா். துணைத் தலைவா் சக்தி.செல்வ கணபதி நன்றி கூறினாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments