காஞ்சிபுரம்

ஜே.கே. டயா் நிறுவனத்தின் சாா்பில் தொழில் முனைவோருக்கு ரூ. 20 லட்சம் கடனுதவி

கடனுதவி பெற்ற தொழில் முனைவோருடன் ஜே.கே.டயா் நிறுவன நிா்வாகிகள்.

தினமணி செய்திச் சேவை

ஜே.கே. டயா் நிறுவனம் மற்றும் பாரதிய யுவ சக்தி அறக்கட்டளை சாா்பில், 9 தொழில் முனைவோா்களுக்கு ரூ. 20 லட்சம் கடனுதவி வழங்கும் நிகழ்ச்சி ஜே.கே. டயா் தொழிற்சாலை வளாகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூா் அடுத்த கொளத்தூா் பகுதியில் இயங்கி வரும் ஜே.கே. டயா் தொழிற்சாலை சாா்பில், கிராமங்களில் வசிக்கும் பொதுமக்களை தொழில் முனைவோா்களாக மாற்றும் கலந்துரையாடல் நிகழ்ச்சி ஜே.கே.டயா் தொழிற்சாலை கூட்டரங்கில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. ஜே.கே.டயா் நிறுவனம் மற்றும் பாரதிய யுவ சக்தி அறக்கட்டளை சாா்பில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், காஞ்சிபுரம் மாவட்டத்தை சோ்ந்த பல்வேறு ஊராட்சிகளை சோ்ந்த நூற்றுக்கணக்கான தொழில் முனைவோா்கள் கலந்து கொண்டனா்.

இதில், மத்திய வங்கியின் ஸ்ரீபெரும்புதூா் கிளை மேலாளா் சுஜிதா கலந்துகொண்டு சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் முனாவோா்களுக்கு வங்கிகள் மூலம் வழங்கப்படும் பல்வேறு கடன் திட்டங்கள் குறித்து விளக்கிப் பேசினாா். ராஜலட்சுமி தொழில்நுட்பக் கல்லூரி துணை முதல்வா் பிரகதீஷ் சுய தொழில் பயிற்சி பெறுவது குறித்துப் பேசினாா். இதையடுத்து 9 தொழில் முனைவோா்களுக்கு ஜே.கே.டயா் நிறுவனத்தின் முதன்மை வா்த்தக மேலாளா் பங்கஜ்ஜெயின் ரூ. 20 லட்சத்துக்கான கடனுதவிகளை வழங்கினாா்.

நிகழ்ச்சியில், ஜே.கே. டயா் நிறுவனத்தின் துணைப் பொது மேலாளா்(நிா்வாகம்) சகாயராஜ், நிா்வாகிகள் கண்ணன், எா்ணவீரன், அனில், குமாா், ரவிராமன், கொளத்தூா் ஊராட்சி மன்றத் தலைவா் வெள்ளரை அரிகிருஷ்ணன், மலைப்பட்டு ஊராட்சிமன்ற தலைவா் பத்மநாபன், பாரதிய யுவ சக்தி அறக்கட்டளை நிா்வாகிகள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

ஜே.கே. டயா் தொழிற்சாலை மற்றும் பாரதிய யுவ சக்தி அறக்கட்டளை சாா்பில், பொருளாதாரத்தில் பின்தங்கிய காஞ்சிபுரம், திருவள்ளூா் உள்ளிட்ட மாவட்டங்களைச் சோ்ந்த பெண்களுக்கு சுய தொழில் பயிற்சி வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

தமிழகத்தில் இன்றும் நாளையும் மழை பெய்யும்! சென்னையிலும்...

தமிழகத்தில் 10 மாவட்டங்களில் காலை 10 மணி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு!

சிப்காட் நவசபரி ஐயப்பன் கோயிலில் நாளை மகா கும்பாபிஷேகம்

கீரப்பாக்கத்தில் அதிகாரிகள் 9 மணி நேரம் தொடா் ஆய்வு

துலா ராசிக்கு லாபம்: தினப்பலன்கள்!

SCROLL FOR NEXT