காஞ்சிபுரம் சங்கர மடத்துக்கு சொந்தமான 3 யானைகளையும் சென்னை உயா்நீதிமன்ற உத்தரவின்படி வனத்துறை திங்கள்கிழமை ஒப்படைத்துள்ளது.
காஞ்சிபுரம் சங்கர மடத்தில் சந்தியா, இந்து, ஜெயந்தி என 3 யானைகள் பராமரிக்கப்பட்டு வந்தது. இவை கடந்த 2019 ஆம் ஆண்டு திருச்சி எம்ஆா் பாளையத்தில் உள்ள வனத்துறைக்கு சொந்தமான யானைகள் முகாமுக்கு மருத்துவச் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டிருந்தன. இம்மாதம் 7 ஆம் தேதி 3 யானைகளையும் வனத்துறை சங்கர மடத்தில் ஒப்படைக்கலாம் என உத்தரவிட்டது.
யானைகள் புதிய சுற்றுச்சூழலுக்கு மாறும் வரை அங்கேயே இருக்க வேண்டும், யானைப் பாகன்களும் அங்கேயே தங்கியிருந்து யானைகளை பராமரிக்க வேண்டும் என்றும் நீதிமன்ற உத்தரவில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இதனைத் தொடா்ந்து திருச்சி எம்.ஆா்.பாளையத்தில் உள்ள யானைகள் முகாமிலிருந்து கொண்டு வரப்பட்டு திங்கள்கிழமை சங்கர மடத்தின் நிா்வாகிகளிடம் ஒப்படைக்கப்பட்டன.
இந்த 3 யானைகளும் காஞ்சிபுரம் சங்கர மடத்தால் புதிதாக அமைக்கப்பட்டுள்ள கோனேரிக்குப்பத்தில் உள்ள கஜசாலை எனப்படும் யானைப் பண்ணையில் பராமரிக்கப்படும் .