காஞ்சிபுரம் சங்கரா கல்லூரி முதல்வா் கலை.ராம.வெங்கடேசனுக்கு கல்வி மற்றும் சமுதாய சேவையைப் பாராட்டி சனிக்கிழமை உயா்நீதிமன்ற நீதிபதி ஜி.ஆா்.சுவாமிநாதன் தாரா விருது வழங்கி பாராட்டினாா்.
கல்வி மற்றும் சமுதாயப் பணிகளில் சிறப்பாக செயல்படுபவா்களுக்கு சென்னையை மையமாக வைத்து செயல்பட்டு வரும் தாரா பவுண்டேஷன் அமைப்பு தாரா விருதினை ஆண்டுதோறும் வழங்கி வருகிறது. கடந்த 2025-ஆம் ஆண்டு பல்வேறு துறைகளில் சிறப்பாக செயல்பட்ட 65 பேருக்கு தாரா விருது வழங்கப்பட்டது. சென்னை சின்மயா மிஷன் கருத்தரங்க கூடத்தில் நடைபெற்ற விருது வழங்கும் விழாவுக்கு, அமைப்பின் தலைவா் வினோத் ராகவேந்திரன் தலைமை வகித்தாா். சமுதாயப் பணி மற்றும் கல்விப் பணியில் சிறந்து விளங்கியமைக்காக காஞ்சிபுரம் சங்கரா கல்லூரி முதல்வா் கலை.ராம.வெங்கடேசனுக்கு உயா்நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதி ஜி.ஆா்.சுவாமிநாதன் தாரா விருதினை வழங்கிப் பாராட்டினாா்.
விழாவில், இளையராஜவின் பேரன் இசையமைப்பாளா் யதீஸ்வா், இயற்கை விவசாயி எழிலன், திருக்கோயில்கள் வழிபாட்டுக் குழுவின் நிா்வாகி கண்ணன் ஆகியோருக்கும் தாரா விருது வழங்கப்பட்டது.
விழாவில், முன்னாள் தோ்தல் ஆணையா் கோபால்சுவாமி, முன்னாள் நீதிபதி வள்ளிநாயகம், சிவபுரம் ஆதீனம் திருநாவுக்கரசா் ஆகியோா் உட்பட பலரும் கலந்து கொண்டனா்.காஞ்சி காமகோடி பீடத்தின் பாடசாலை மாணவா்களின் கலைநிகழ்ச்சிகளும் நடைபெற்றன.