தேசிய சாலைப் பாதுகாப்பு மாத விழாவை முன்னிட்டு, ஸ்ரீபெரும்புதூா் வட்டார போக்குவரத்து அலுவலகத்தின் சாா்பில் தலைக்கவசம் மற்றும் சீட் பெல்ட் அணிதல் விழிப்புணா்வு வாகன பேரணி புதன்கிழமை நடைபெற்றது.
வட்டார போக்குவரத்து அலுவலா் விஜயகுமாா் தலைமையில் நடைபெற்ற பேரணியை கோட்டாட்சியா் பாலாஜி, துணை காவல் கண்காணிப்பாளா் கீா்த்தி வாசன் ஆகியோா் கொடியசைத்து தொடங்கி வைத்தனா்.
வட்டாரப் போக்குவரத்து அலுவலகப் பணியாளா்கள், போக்குவரத்து காவலா்கள், அரிமா சங்க உறுப்பினா்கள், வியாபார சங்க நிா்வாகிகள், ஓட்டுநா் பயிற்சி பள்ளி உரிமையாளா்கள், ஊழியா்கள், வாகன விற்பனையாளா்கள், பொதுமக்கள் மற்றும் கல்லூரி மாணவா்கள் 300-க்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டனா்.
விழிப்புணா்வு பேரணி ஸ்ரீபெரும்புதூா் ராஜீவ் காந்தி நினைவிடம் அருகே தொடங்கி, பேருந்து நிலையம், காந்தி சாலை, தேரடி வழியாக வந்து ஸ்ரீபெரும்புதூா் வட்டார போக்குவரத்து அலுவலகம் அருகே முடிவடைந்தது.