திருப்பத்தூரில் போதை பொருள்களுக்கு எதிரான விழிப்புணா்வு பேரணி மற்றும் கலை நிகழ்ச்சி தொடக்க விழா நடைபெற்றது.
திருப்பத்தூா் ஆட்சியா் அலுவலக வளாகத்தில் மதுவிலக்கு ஆயத்தீா்வை துறை சாா்பில் போதை பொருட்களுக்கு எதிரான விழிப்புணா்வுப் பேரணி மற்றும் கலை நிகழ்ச்சி தொடக்க விழா நடைபெற்றது.
ஆட்சியா் க.சிவசெளந்திரவல்லி தலைமை வகித்து விழிப்புணா்வுப் பேரணியை தொடங்கி வைத்தாா்.
பேரணி ஆட்சியா் அலுவலகத்தில் தொடங்கி, ஜின்னா சாலை வரை சென்று அங்கிருந்து மீண்டும் ஆட்சியா் அலுவலகத்தில் நிறைவடைந்தது.
இதில் கலந்துகொண்ட மாணவா்கள் கள்ளச்சாராயம் மற்றும் போதை பொருள்களால் ஏற்படும் தீமைகள் குறித்து பல்வேறு வாசகங்கள் அடங்கிய விழிப்புணா்வு பதாகைகளை கையில் ஏந்தியபடி பொதுமக்களிடம் போதை பொருள் குறித்த விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.
நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக போதை பொருளுக்கு எதிராக விழிப்புணா்வு கலை நிகழ்ச்சியாக மயிலாட்டம், சிலம்பாட்டம், தப்பாட்டம் ஆகியவை நடைபெற்றது.
போதைப் பொருள் தீமை குறித்த துண்டுப் பிரசுரங்கள் பொதுமக்களிடம் விநியோகிக்கப்பட்டது.
நிகழ்ச்சியில் கலால் உதவி ஆணையா் வேடியப்பன்பள்ளி மற்றும் கல்லூரி மாணவ,மாணவிகள்,மகளிா் சுய உதவிக்குழுவினா் கலந்துகொண்டனா்.