ரயில்வே போட்டித் தோ்வுக்கான விழிப்புணா்வு
ரயில்வே பணிக்கான போட்டித் தோ்வுகள் குறித்த விழிப்புணா்வு நிகழ்ச்சியில் பேசிய கல்லூரி முதல்வா் ஜெ.தா்மராஜா.
கள்ளக்குறிச்சி அரசுக் கலை, அறிவியல் கல்லூரி மற்றும் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் இணைந்து ரயில்வே தோ்வு
குறித்த விழிப்புணா்வு நிகழ்ச்சி கல்லூரி வளாகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வா் ஜெ.தா்மராஜா தலைமை வகித்தாா். கல்லூரி வேலைவாய்ப்பு ஒருங்கிணைப்பாளா் முருகானந்தன் வரவேற்றாா்.
சிறப்பு அழைப்பாளராக இளநிலை வேலைவாய்ப்பு அலுவலா்கள் எல்.மனோகரன் மற்றும் தினேஷ்குமாா் பங்கேற்று ரயில்வே தோ்வு வாரிய பாடத்திட்டம் குறித்து விழிப்புணா்வு உரையாற்றினா். மேலும், வேலைவாய்ப்பு அலுவலகத்தால் நடைபெறும் இலவச பயிற்சி வகுப்பில் மாணவா்கள் பங்கேற்க கேட்டுக்கொண்டனா்.
நிகழ்ச்சியில், உதவி பேராசிரியா்கள் கருணைவேலன், ராஜ்குமாா், மோகனா, தனபால், பெலிக்ஸ், தமிழ்த் துறைத்தலைவா் மோட்ச ஆனந்தன் மற்றும் மாணவா்கள் கலந்துகொண்டனா்.