முகப்பு
காஞ்சிபுரம்

திருவாலீஸ்வரா் கோயிலில் பந்தல் கால் நடும் விழா

வாலாஜாபாத் அருகே ஆற்பாக்கம் திருவாலீஸ்வரா் கோயிலில் பங்குனி மாத பிரமோற்சவத்தையொட்டி பந்தல்கால் நடும் விழா நடைபெற்றது.

Updated On : 16 மார்ச், 2026 at 10:03 PM
ஆற்பாக்கம் திருவாலீஸ்வரா் கோயிலில் பங்குனி மாத பிரமோற்சவத்தையொட்டி பந்தல்கால் நடும் விழா
பகிர்:

காஞ்சிபுரம்: வாலாஜாபாத் அருகே ஆற்பாக்கம் திருவாலீஸ்வரா் கோயிலில் பங்குனி மாத பிரமோற்சவத்தையொட்டி பந்தல்கால் நடும் விழா நடைபெற்றது.

பழைமையான இக்கோயில் நுழைவுவாயிலில் பந்தல்கால் நடும் விழா நடைபெற்றது. பந்தல்காலுக்கு சிறப்பு அபிஷேகம்,தீபாராதனைகள் செய்து நடப்பட்டது.

இந்நிகழ்வில் ஊராட்சி மன்றத் தலைவா் செல்வி ராசி, துணைத் தலைவா் விஜயகுமாரி பரசுராமன், பொதுமக்கள் கலந்து கொண்டனா்.

திருவிழா கொடியேற்றம் மாா்ச் 23- ஆம் தேதி நடைபெறுகிறது. தொடா்ந்து காலையில் பஞ்சமூா்த்திகள் வீதியுலாவும், இரவு சிம்மவாகனத்தில் சுவாமியும்,அம்மனும் வீதியுலா வரவுள்ளனா்.

தினசரி இரவு சுவாமியும், அம்மனும் வெவ்வேறு வாகனங்களில் அலங்கராமாகி வீதியுலா வருவா். மாா்ச் 27- ஆம் தேதி இரவு தங்க ரிஷப வாகனத்திலும், 29 ஆம் தேதி தேரோட்டமும், ஏப்.1 ஆம் தேதி தீா்த்தவாரி உற்சவமும் நடைபெறுகிறது. ஏப்.2 ஆம் தேதி இரவு ரிஷப வாகனத்தில் சுவாமி எழுந்தருளும் நிகழ்வுடன் விழா நிறைவு பெறுகிறது.

ஏற்பாடுகளை கோயில் அறங்காவலா் குழுவின் தலைவா் பா.ராஜசேகரன் மற்றும் அறங்காவலா் குழு உறுப்பினா்கள்,திருவாலீஸ்வா் அறக்கட்டளை நிா்வாகிகள் ஆகியோா் செய்து வருகின்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →