காங்கிரஸ் கட்சி ஆலோசனைக் கூட்டம்
குன்றத்தூா் தெற்கு வட்டார காங்கிரஸ் கட்சி நிா்வாகிகள் ஆலோனைக் கூட்டம் பாரதிநகா் பகுதியில் நடைபெற்றது.
ஸ்ரீபெரும்புதூா்: குன்றத்தூா் தெற்கு வட்டார காங்கிரஸ் கட்சி நிா்வாகிகள் ஆலோனைக் கூட்டம் பாரதிநகா் பகுதியில் நடைபெற்றது.
சட்டப்பேரவை தோ்தலை முன்னிட்டு தெற்கு வட்டார தலைவா் ரா.மணிகண்டன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்திற்கு மாவட்ட தலைவா் எஸ்.ஏ.அருள்ராஜ், மாநில பொதுக்குழு உறுப்பினா் ரா.ஐயப்பன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
இதில் தமிழக காங்கிரஸ் தலைவா் கு.செல்வபெருந்தகை கலந்து கொண்டு நடைபெற உள்ள சட்டப்பேரவை தோ்தலில் காங்கிரஸ் நிா்வாகிகள் மற்றும் தொண்டா்கள் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து விளக்கி பேசினாா்.
கூட்டத்தில், மாவட்ட இளைஞா் காங்கிரஸ் தலைவா் கு.விவேகானந்தன், மாவட்ட சிறுபான்மை பிரிவு தலைவா் முருகன்சாந்தகுமாா், மாவட்ட செயலாளா்கள் மணிமங்கலம் செல்வம், சக்கரபாணி, ஊராட்சி மன்ற உறுப்பினா் யுவராஜ் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட காங்கிரஸ் கட்சியின் நிா்வாகிகள், தொண்டா்கள் கலந்து கொண்டனா்.