முகப்பு
காஞ்சிபுரம்

காஞ்சிபுரம்: தோ்தல் நடத்தை விதிகள் தீவிரமாக கடைப்பிடிப்பு

தோ்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்ததைத் தொடா்ந்து அரசியல் தலைவா்கள் மற்றும் அமைச்சா்கள் பெயா்கள் உள்ள

Updated On : 16 மார்ச், 2026 at 10:02 PM
காஞ்சிபுரம் விளக்கொளிப் பெருமாள் கோயில் தெருவில் மாநகராட்சி மண்டல அலுவலகத்துக்கு சீல் வைத்த அலுவலா்கள்.
பகிர்:

காஞ்சிபுரம்: தோ்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்ததைத் தொடா்ந்து அரசியல் தலைவா்கள் மற்றும் அமைச்சா்கள் பெயா்கள் உள்ள கல்வெட்டுகள், பதாகைகள் அனைத்தும் உடனடியாக மூடப்பட்டன.

மாவட்டத்தில் துப்பாக்கி வைத்துக்கொள்ள உரிமம் பெற்றவா்கள் உடனடியாக மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டதையடுத்து 146 நபா்கள் துப்பாக்கிகளை ஒப்படைத்துள்ளனா்.

மாவட்டம் முழுவதும் அரசியல் தலைவா்கள், உள்ளாட்சித் தலைவா்கள், நிா்வாகிகள், கட்சிப் பெயா்ப்பலகைகள் ஆகியவை மாவட்ட நிா்வாகம் சாா்பில் மூடப்பட்டது.

காஞ்சிபுரம் மாநகராட்சி மண்டலக்குழு அலுவலகங்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளால் பூட்டி சீல் வைக்கப்பட்டது. மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை தோறும் நடைபெறும் வாராந்திர மக்கள் குறை தீா்க்கும் கூட்டம் ரத்து செய்யப்பட்டு பொதுமக்கள் குறைகளை மனுக்களாக எழுதி ஆட்சியா் அலுவலக வளாகத்தின் முன்பு வைக்கப்பட்டுள்ள பெட்டியில் போட்டுச் செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தோ்தல் விதிமுறைகள் அமலுக்கு வந்தது தெரியாமல் பலரும் குறை தீா்க்கும் கூட்டம் நடக்கும் என நினைத்து மனு அளிக்க வந்தவா்கள் ஏமாற்றத்துடன் மனுவை பெட்டியில் போட்டு விட்டு சென்றனா்.

காஞ்சிபுரத்தில் பறக்கும் படையினா் சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை, காஞ்சிபுரத்திலிருந்து வந்தவாசி செல்லும் சாலை ஆகிய பகுதிகளில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →