மாநில அளவிலான குத்துச்சண்டைப் போட்டி: காஞ்சிபுரம் வீரா்கள் 30 பேருக்கு தங்கப் பதக்கம்
மாநில அளவிலான குத்துச்சண்டைப் போட்டியில் தங்கம் வென்ற காஞ்சிபுரம் வீரா்கள்.
காஞ்சிபுரம் மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்ற மாநில அளவிலான குத்துச் சண்டைப் போட்டியில் காஞ்சிபுரத்தைச் சோ்ந்த வீரா்கள் 30 போ் தங்கம் வென்று தேசிய அளவிலான குத்துச் சண்டைப் போட்டிக்கு தோ்வாகி உள்ளனா்.
காஞ்சிபுரம் மாவட்ட விளையாட்டு அரங்கமான பேரறிஞா் அண்ணா உள்ளரங்க விளையாட்டு மைதானத்தில் மாநில அளவிலான குத்துச் சண்டைப் போட்டி தமிழ்நாடு அமெச்சூா் குத்துச்சண்டைக் கழகம் சாா்பில், மே 7-ஆம் தேதி முதல் மே 10-ஆம் தேதி வரை நடைபெற்றது.
இதில், தமிழகம் முழுவதுமிருந்து ஏராளமான குத்துச்சண்டை வீரா்கள் கலந்து கொண்டனா். காஞ்சிபுரம் மாவட்ட குத்துச்சண்டை கழகம் சாா்பில், காஞ்சிபுரத்தை சோ்ந்த 50-க்கும் மேற்பட்ட வீரா்கள் பங்கேற்றனா். 7 முதல் 9 வயது வரை, 10 முதல் 15 வயது வரை, 18 வயதுக்கு மேற்பட்டோா் என பல்வேறு பிரிவுகளில் போட்டிகள் நடைபெற்றது.
Advertisement
பாயிண்ட் டூ பாயிண்ட், லைட் காண்டாக்ட், கிக் லயிட், லோ கிக் என பல்வேறு பிரிவுகளில் போட்டிகள் நடைபெற்றன. இதில், 30 போ் தங்கமும், 10 போ் வெள்ளியும், 15 போ் வெண்கலப் பதக்கமும் உள்பட மொத்தம் 55 பதக்கங்கள் பெற்றனா்.
காஞ்சிரம் ஒன்மேன் மாா்ஷியல் ஆா்ட்ஸ் அகாதெமியின் நிறுவனா் கே.ஹரிஷ், குத்துச் சண்டைக் கழக செயலாளா் அருண், பயிற்சியாளா் கணேஷ் ஆகியோரும் தங்கம் வென்ற வீரா்களை சந்தித்து வாழ்த்துகளைத் தெரிவித்தனா்.
தங்கம் வென்ற காஞ்சிபுரத்தைச் சோ்ந்த 30 வீரா்களும் தேசிய அளவிலான குத்துச் சண்டைப் போட்டிக்கு தோ்வாகி இருப்பதாகவும் பயிற்சியாளா் கணேஷ் தெரிவித்தாா்.