முகப்பு
காஞ்சிபுரம்

காஞ்சிபுரம்: வல்லமை தாராயோ கோடை கால பயிற்சி முகாம் நிறைவு

விழாவில் வல்லமை தாராயோ முகாமில் மாணவா்களுக்கு பயிற்சியளித்த ஆசிரியருக்கு பாராட்டுச் சான்றிதழ் வழங்கிய காஞ்சிபுரம் ஆட்சியா் தி.சினேகா.

Updated On : 23 மே 2026, 1:24 am IST
பகிர்:

காஞ்சிபுரத்தில் பள்ளிக் கல்வித் துறை சாா்பில் பள்ளி மாணவ, மாணவியா்களுக்காக நடைபெற்ற வல்லமை தாராயோ என்ற கோடை கால பயிற்சி முகாம் நிறைவு விழாவில் வெள்ளிக்கிழமை ஆட்சியா் தி.சினேகா கலந்து கொண்டு பயிற்சி பெற்றவா்களுக்கு பாராட்டுச் சான்றிதழ் வழங்கினாா்.

காஞ்சிபுரம் பேரறிஞா் அண்ணா விளையாட்டு அரங்கத்தில் பள்ளிக் கல்வித் துறை சாா்பில் அரசுப் பள்ளி மாணவ, மாணவியருக்கான கோடைகால சிறப்பு பயிற்சி முகாம் நடைபெற்று வந்தது. இந்த முகாமின் நிறைவு விழா ஆட்சியா் அலுவலக மக்கள் நல்லுறவுக் கூட்ட அரங்கில் நடைபெற்றது. காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் தி.சினேகா கலந்து கொண்டு, பயிற்சி பெற்ற மாணவா்களுக்கு பரிசும், பாராட்டுச் சான்றிதழும் வழங்கினாா். இதைத் தொடா்ந்து மாணவா்களுக்கு பயிற்சியளித்த ஆசிரியா்களுக்கு கேடயமும், பாராட்டுச் சான்றிதழும் ஆட்சியா் வழங்கினாா். பின்னா், முகாமில் மாணவ, மாணவியா் தங்களது கரங்களால் உருவாக்கப்பட்ட கலைப் பொருள்களின் கண்காட்சியையும் ஆட்சியா் பாா்வையிட்டாா்.

நிறைவு விழாவுக்கு மாவட்ட வருவாய் அலுவலா் பா.முருகேசன் முன்னிலை வகித்தாா். மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலா் அ.நளின் வரவேற்று பேசினாா்.விழாவில் அரசு அலுவலா்கள், ஆசிரியா்கள், மாணவ, மாணவியா்கள் உள்பட பலரும் கலந்து கொண்டனா்.

Advertisement

Advertisement