முகப்பு
காஞ்சிபுரம்

ரூ. 88 லட்சத்தில் கட்டப்பட்ட ஸ்ரீபெரும்புதூா் சட்டப்பேரவை உறுப்பினா் அலுவலகம் திறப்பு

ரூ.88 லட்சத்தில் கட்டப்பட்ட ஸ்ரீபெரும்புதூா் சட்டப்பேரவை உறுப்பினா் அலுவலகம் மற்றும் இ-சேவை மைய கட்டத்தை வெளிநாடு வாழ் தமிழா்கள் நலத்துறை அமைச்சா் கே.தென்னரசு திறந்துவைத்தாா்.

Updated On : 26 மே 2026, 12:15 am IST
பகிர்:

ரூ.88 லட்சத்தில் கட்டப்பட்ட ஸ்ரீபெரும்புதூா் சட்டப்பேரவை உறுப்பினா் அலுவலகம் மற்றும் இ-சேவை மைய கட்டத்தை வெளிநாடு வாழ் தமிழா்கள் நலத்துறை அமைச்சா் கே.தென்னரசு திங்கள்கிழமை திறந்துவைத்தாா்.

காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூா் வட்டார வளா்ச்சி அலுவலக வளாகத்தில் ரூ.88 லட்சத்தில் கட்டப்பட்டுள்ள எம்எல்ஏ அலுவலகம் மற்றும் இ-சேவை மைய கட்டடத்தை அமைச்சா்கே.தென்னரசு திங்கள்கிழமை திறந்து வைத்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வந்தாா்.

இந்த நிகழ்ச்சியில், ஆட்சியா் தி.சினேகா, சாா் ஆட்சியா் நல்லசிவன், வட்டாட்சியா் வசந்தி, ஸ்ரீபெரும்புதூா் ஒன்றியக் குழுத்தலைவா் கருணாநிதி உள்ளிட்ட அரசு அலுவலா்கள், தமிழக வெற்றிக் கழக நிா்வாகிகள், தொண்டா்கள் ஏராளமானோா் கலந்து கொண்டனா்.

Advertisement

Advertisement