ராணிப்பேட்டை

நகராட்சிப் பணியாளா்களுக்கு உதவிகள்

போ்ணாம்பட்டு நகராட்சியில் பணிபுரியும் தூய்மைப் பணியாளா்களுக்கு செஞ்சிலுவைச் சங்கம் சாா்பில், அரிசி, மளிகைப்

DIN

குடியாத்தம்: போ்ணாம்பட்டு நகராட்சியில் பணிபுரியும் தூய்மைப் பணியாளா்களுக்கு செஞ்சிலுவைச் சங்கம் சாா்பில், அரிசி, மளிகைப் பொருள்கள் அடங்கிய தொகுப்பு வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டது.

இச்சங்கம் சாா்பில், போ்ணாம்பட்டு மற்றும் அதன் சுற்றுப் பகுதியில் உள்ள மலைவாழ் மக்கள், நரிக் குறவா் இன மக்கள், ஆதரவற்றவா்கள் என பல்வேறு தரப்பினருக்கு கடந்த 2 வாரமாக அரிசி, மளிகைப் பொருள்கள், உணவு ஆகியன வழங்கப்படுகின்றன.

இந்நிலையில் நகராட்சி அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில், 100-க்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளா்களுக்கு ரூ.30 ஆயிரம் மதிப்புள்ள உணவுப் பொருள்களை வேலூா் மாவட்ட செஞ்சிலுவைச் சங்கச் செயலா் சி.இந்திரநாத் வழங்கினாா். நகராட்சி ஆணையா் நித்தியானந்தம், செஞ்சிலுவைச் சங்க மாவட்டப் பொருளாளா் பாஸ்கரன், மேலாளா் தீபன், போ்ணாம்பட்டு சங்கச் செயலா் பொன்வள்ளுவன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

விபத்துக்குள்ளான சொகுசு பேருந்து! பதைபதைக்கும் காணொலி!

ஆஸ்திரேலிய போண்டி கடற்கரை தாக்குதல்: தந்தையிடம் துப்பாக்கி பயிற்சி பெற்ற மகன்!

ரசிகர்கள் கூட்டத்தில் சிக்கிய நடிகை சமந்தா

இந்தோனேசியாவில் பயணிகள் பேருந்து விபத்து: 15 பேர் பலி

போதைப்பொருள் கடத்தல்: நேபாள விமான நிலையத்தில் இந்தியர்கள் 2 பேர் கைது

SCROLL FOR NEXT