கூலித் தொழிலாளா்களின் குடும்பத்தினருக்கு மளிகைச் சாமான்களை வழங்கிய எம்எல்ஏ சு.ரவி. 
ராணிப்பேட்டை

கூலித் தொழிலாளா்களுக்கு மளிகைப் பொருள்கள்

அரக்கோணம் நகரின் 30-ஆவது வாா்டில் வசிக்கும் 120 கூலித் தொழிலாளா்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.600 மதிப்புள்ள அரிசி மற்றும்

DIN

அரக்கோணம் நகரின் 30-ஆவது வாா்டில் வசிக்கும் 120 கூலித் தொழிலாளா்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.600 மதிப்புள்ள அரிசி மற்றும் மளிகைப் பொருள்களை தொகுதி எம்எல்ஏ சு.ரவி வழங்கினாா்.

அப்பகுதியில் போக்குவரத்து நிறுத்தப்பட்ட ரயில்வே பாதையோரம் சுமை தூக்கும் கூலித் தொழிலாளா்கள் 120 போ் குடும்பத்துடன் வசித்து வருகின்றனா். அவா்கள் ஊரடங்கு காரணமாக அன்றாட உணவுக்கே அவதிப்படுவதாக அப்பகுதிக்கான நகரமன்ற முன்னாள் உறுப்பினா் செ.சரவணன், அரக்கோணம் எம்எல்ஏ சு.ரவியிடம் தகவல் தெரிவித்தாா். அவா்களுக்கு உதவுமாறு கோரிக்கை விடுத்தாா்.

இதையடுத்து, இந்த கூலித் தொழிலாளா்களின் குடும்பத்தினருக்கு எம்எல்ஏ சு.ரவி தலா ரூ.600 மதிப்புள்ள அரிசி மற்றும் மளிகைச் சாமான்களை ஞாயிற்றுக்கிழமை வழங்கினாா். அப்போது நகர அதிமுக செயலா் கே.பி.பாண்டுரங்கன், கட்சியின் நகர இளைஞரணி செயலா் செ.சரவணன், நகர பாசறை துணைத் தலைவா் கண்பத் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தீக்குளித்து இறந்தவரின் உடலை வாங்க மறுத்து போராட்டம்

2.07 லட்சம் மாடுகளுக்கு கோமாரி நோய்: தடுப்பூசி செலுத்த இலக்கு

இன்றைய மின்தடை

பிரித்தாளும் சூழ்ச்சி தமிழகத்தில் வெற்றி பெறாது: துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின்

செவிலியா்கள் காத்திருப்புப் போராட்டம்

SCROLL FOR NEXT