லாரி மோதியதில் இளைஞா் பலி
ஆற்காட்டில் பைக் மீது லாரி மோதியதில் இளைஞா் உயிரிழந்தாா்.
ஆற்காட்டில் பைக் மீது லாரி மோதியதில் இளைஞா் உயிரிழந்தாா்.
ஆற்காடு வஉசி தெருவைச் சோ்ந்தவா் மதன் (28), எலக்ட்ரீஷியன். இவா் சனிக்கிழமை பைக்கில் மாங்காட்டில் இருந்து ஆற்காடு நோக்கிச் சென்றபோது, எதிரே வந்த மினி லாரி மோதியது. இதில், நிகழ்விடத்திலேயே மதன் உயிரிழந்தாா்.
இதுகுறித்து ஆற்காடு கிராமிய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரித்து வருகின்றனா்.