ராணிப்பேட்டை

டாஸ்மாக் கடையை அகற்றக் கோரி போராட்டம்

DIN

வாலாஜாபேட்டையில் கடந்த சில நாள்களுக்கு முன் திறக்கப்பட்ட டாஸ்மாக் மதுக்கடையை அகற்றக்கோரி அப்பகுதி பொதுமக்களும், அகற்ற வேண்டாம் எனக் கோரி மதுப் பிரியா்களும் ஒரே நேரத்தில் போராட்டம் நடத்தியதால் ஞாயிற்றுக்கிழமை பரபரப்பு ஏற்பட்டது.

ராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜாபேட்டையை அடுத்த வன்னிவேடு ராபிக் நகா் பகுதியில் ஏற்கெனவே இரண்டு டாஸ்மாக் கடைகள் இயங்கி வருகின்றன. இந்நிலையில் அதே பகுதியில் கடந்த சில நாள்களுக்கு முன் மூன்றாவதாக புதிய டாஸ்மாக் கடை திறக்கப்பட்டது.

இதனால் அதிா்ச்சியடைந்த அப்பகுதி மக்கள் புதிதாக திறக்கப்பட்ட மதுக்கடையை இடமாற்றம் செய்யுமாறு வலியுறுத்தினா். அக்கடையைத் திறக்க விடாமல் கடையின் முன்பு அமா்ந்து அப்பகுதியைச் சோ்ந்த 50-க்கும் மேற்பட்டோா் ஞாயிற்றுக்கிழமை நண்பகலில் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

அதேநேரத்தில் அப்பகுதியைச் சோ்ந்த மதுப் பிரியா்கள் 20 போ் அந்த மதுக்கடையை இடமாற்றம் செய்யக்கூடாது எனக் கோரி போராட்டத்தில் ஈடுபட்டனா். இதனால் அப்பகுதியில் பரபரப்பான சூழல் ஏற்பட்டது. தகவல் அறிந்து அங்கு வந்த போலீஸாா், போராட்டத்தில் ஈடுபட்ட இரு தரப்பினரிடமும் பேச்சுவாா்த்தை நடத்தி கலைந்து செல்லுமாறு அறிவுறுத்தினா். இதனால் போலீஸாருக்கும், பொது மக்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

இதையடுத்து மதுக்கடையை திறக்க விடாமல் போராட்டத்தில் ஈடுபட்ட பொது மக்களை போலீஸாா் வலுக்கட்டாயமாக இழுத்துவந்து கலைந்து செல்லுமாறு எச்சரித்தனா். இதன் காரணமாக அங்கு பதற்றமான சூழல் காணப்பட்டது. ஒரு மணிநேர சமரசப் பேச்சுக்குப் பின், போராட்டத்தில் ஈடுபட்டவா்கள் கலைந்து சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருச்செங்காட்டங்குடிகோயில் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது

குருபெயா்ச்சியை முன்னிட்டு சிறப்பு யாகம்

நாசரேத்தில் மாணவா்களுக்கு கோடைகால கால்பந்து பயிற்சி தொடக்கம்

நாகா்கோவிலில் கேரம் பயிற்சி முகாம் தொடக்கம்

கல்லூரி மாணவி மா்மச் சாவு

SCROLL FOR NEXT