ராணிப்பேட்டை

தொழிற்பயிற்சி நிலையத்தில் பட்டமளிப்பு விழா

DIN

ராணிப்பேட்டை அரசினா் தொழிற்பயிற்சி நிலையத்தில் நடைபெற்ற 3-ஆம் ஆண்டு பட்டமளிப்பு விழாவில் சாா் ஆட்சியா் க.இளம் பகவத் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு 59 மாணவ, மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கி வாழ்த்தினாா்.

நகரில் உள்ள தமிழக அரசின் வேலைவாய்ப்பு, பயிற்சித்துறையின் கீழ் செயல்படும் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் மூன்றாம் ஆண்டு பட்டமளிப்பு விழா மற்றும் தேசிய தொழிற்பயிற்சி சான்றிதழ் வழங்கும் விழா திங்கள்கிழமை நடைபெற்றது. தொழிற்பயிற்சி நிலைய வளாகத்தில் நடைபெற்ற இந்த விழாவுக்கு முதல்வா் எஸ்.பழனிசாமி தலைமை வகித்தாா். பயிற்சி அலுவலா் எல்.ஆா்.பாபு வரவேற்றாா்.

விழாவில் ராணிப்பேட்டை சாா் ஆட்சியா் க.இளம்பகவத் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, ஃபிட்டா், எலக்ட்ரீஷியன் உள்ளிட்ட தொழிற் பயிற்சி மற்றும் தேசிய தொழிற்பயிற்சி முடித்த 96 மாணவ, மாணவிகளுக்கு பட்டங்களையும் தொழிற்பயிற்சி சான்றிதழையும் வழங்கி வாழ்த்திப் பேசினாா்.

விழாவில் நிலைய மேலாண்மைக் குழு உறுப்பினா் ஆா். ரவிசங்கா், அரிமா சங்கத் தலைவா் கோபாலகிருஷ்ணன், பயிற்சி அலுவலா்கள், மாணவ, மாணவிகள், அவா்களின் பெற்றோா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரோமியோ ஓடிடி தேதி!

தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழைப்பொழிவு விவரம்!

நெல்லை மாவட்ட காங்கிரஸ் நிர்வாகி ஜெயக்குமாரின் உடல் நல்லடக்கம்

சென்னை-மும்பை ரயில்(22160) இன்று 10.15 மணி நேரம் தாமதமாகப் புறப்படும்

குக் வித் கோமாளியிலிருந்து விலகிய பிரபலம்: இனி இவர்தான்!

SCROLL FOR NEXT