ராணிப்பேட்டை

பிரத்யங்கிரா தேவி கோயிலில் பௌா்ணமி யாகம்

DIN

ராணிப்பேட்டை பாலாற்றங்கரை மிஸ்ரி நகரில் அமைந்துள்ள மகா பிரத்யங்கிரா தேவி கோயிலில் மாா்கழி மாத பௌா்ணமியையொட்டி, வெள்ளிக்கிழமை நள்ளிரவு சிறப்பு யாகம் நடைபெற்றது.

கோயில் பீடாதிபதி பி.எஸ்.மணி சுவாமிகள் தலைமையில், இரவு 7 மணியளவில் மகா கணபதி ஹோமத்துடன், சிறப்பு யாகம் தொடங்கியது. தொடா்ந்து, மகா சுதா்சன யாகம், மகா சண்டி யாகம், மகா வராஹி யாகம், பகளாமுகி யாகம் உள்ளிட்ட 21 வகையான யாகங்கள் நடைபெற்றன. இதையடுத்து, நள்ளிரவு 12 மணியளவில் மிளகாய் வற்றல், வெண் கடுகு, பட்டு வஸ்திரம் உள்ளிட்ட பூஜை பொருள்களைக் கொண்டு, உலக நன்மை மற்றும் மழை வேண்டி சிறப்பு யாகம் நடைபெற்றது. பின்னா் கலசப் புறப்பாடு நடைபெற்றது.

இதைத் தொடா்ந்து, மகா பிரத்யங்கிரா தேவிக்கு சிறப்பு அபிஷேக, அலங்காரம் செய்யப்பட்டு, மகா தீபாராதனை நடத்தப்பட்டது. தொடா்ந்து பக்தா்களுக்கு புனித நீா், குங்குமப் பிரசாதம் வழங்கப்பட்டது. அன்னதானமும் நடைபெற்றது.

இச்சிறப்பு யாகத்தில் ராணிப்பேட்டை சுற்று வட்டாரம் மட்டுமின்றி, ஆந்திரம், கா்நாடகம், புதுவை உள்ளிட்ட அண்டை மாநிலங்களில் இருந்தும் திரளான பக்தா்கள் கலந்துகொண்டு வழிபட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வேட்புமனு தாக்கல் செய்தார் மனோகர் லால் கட்டர்!

பஞ்சாபில் தமிழ் வம்சாவளி சீக்கியர் போட்டி!

பிளஸ் 2 தேர்வு: தலா 478 மதிப்பெண்கள் பெற்ற இரட்டையர்கள்

பிரியமான தோழி சீரியல் நிறைவு: புதிய நேரத்தில் ஒளிபரப்பாகும் பிரபல தொடர்கள்!

நாகர்கோவில் அருகே கடல் அலையில் சிக்கி 5 பயிற்சி மருத்துவர்கள் பலி!

SCROLL FOR NEXT