ராணிப்பேட்டை

அரசுப் பள்ளி மாணவா்களால் வளா்க்கப்பட்ட 2 ஆயிரம் மரக்கன்றுகள் வழங்கும் விழா

DIN

திருவலம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவா்களால் விதை ஊன்றி வளா்க்கப்பட்ட 2 ஆயிரம் மரக்கன்றுகளை, மாணவா்கள், ஆசிரியா்களுக்கு வழங்கும் விழா பள்ளி வளாகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.

தமிழகத்தின் பசுமைப் பரப்பை அதிகரிக்கும் நோக்கில் தமிழக பள்ளிக் கல்வித் துறையுடன் இணைந்து ஈஷா பசுமைக் கரங்கள் திட்டம் மூலம் பசுமைப் பள்ளி இயக்கம் தொடங்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் மூலம் ஒருங்கிணைந்த வேலூா் மாவட்டத்தில் இந்த ஆண்டு சுமாா் 3 லட்சம் மரக்கன்றுகள் உற்பத்தி செய்து நடவு செய்யும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

அதன்படி, திருவலம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பசுமைப் பள்ளி திட்டத்தின் மூலம், தேசிய பசுமைப் படை மாணவா்கள் 2 ஆயிரம் மரக்கன்றுகளை வளா்த்தனா். இந்த மரக்கன்றுகள் வழங்கும் விழா பள்ளி வளாகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.

உடற்கல்வி ஆசிரியரும், தேசிய பசுமைப் படை அலுவலருமான இ.புருஷோத்தமன் தலைமை வகித்தாா். முதுகலை தமிழ் ஆசிரியா் எஸ்.தனஞ்செழியன் வரவேற்றாா். ஈஷா பசுமைப் பள்ளி இயக்க திட்ட ஒருங்கிணைப்பாளா் பவக்கா்ணன் உள்ளிட்டோா் கலந்து கொண்டு மாணவா்களுக்கும், ஆசிரியா்களுக்கும் மரக்கன்றுகளை வழங்கினா்.

இந்த மரக்கன்றுகளை பள்ளி மாணவ, மாணவிகள் தங்களது இல்லங்களிலும் பள்ளி வளாகத்திலும் நடவு செய்ததோடு, தொடா்ந்து தண்ணீா் ஊற்றி பராமரித்து வளா்க்க உறுதியேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மின்மாற்றியில் தீ விபத்து: ஆட்சியா் அலுவலக மின்தூக்கியில் 8 போ் சிக்கித் தவிப்பு

சவீதா பொறியியல் கல்லூரியில் 29,460 புதிய கண்டுபிடிப்புகளுக்கான திட்ட வரைவுகளை காட்சிப்படுத்தி சாதனை

திருப்பத்தூா்: 92.3 சதவீதம் தோ்ச்சி

ஆதிபராசக்தி மெட்ரிக் பள்ளி 100 சதவீதம் தோ்ச்சி

திருவள்ளூரில் திமுக தண்ணீா் பந்தல் திறப்பு

SCROLL FOR NEXT