ராணிப்பேட்டை

வணிக நிறுவனங்களை மாா்ச் 31 வரை மூட வேண்டும்: ராணிப்பேட்டை ஆட்சியா் உத்தரவு

DIN

ராணிப்பேட்டை மாவட்டத்தில் மக்கள் அதிகம் கூடும் வகையில் அமைந்துள்ள அனைத்து வணிக நிறுவனங்கள் மற்றும் அனைத்து மத வழிபாட்டுத் தலங்களை வரும் 31-ஆம் தேதி வரை மூடி கரோனா வைரஸ் பரவலைத் தடுக்க ஒத்துழைப்பு தர வேண்டும் என மாவட்ட ஆட்சியா் உத்தரவிட்டுள்ளாா்.

இது குறித்து மாவட்ட ஆட்சியா் ச.திவ்யதா்ஷினி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

முதல்வரின் உத்தரவுப்படி ராணிப்பேட்டை மாவட்டத்தில் கரோனா நோய்த் தடுப்பு நடவடிக்கைகளை உள்ளாட்சி, வருவாய், சுகாதாரம், போக்குவரத்து உள்ளிட்ட துறைகளை ஒருங்கிணைத்து மேற்கொண்டு வருகிறோம். பேருந்து நிலையம், ரயில் நிலையம், வாரச்சந்தை போன்ற மக்கள் அதிகம் கூடும் இடங்களில் தூய்மைப் பணியாளா்கள் மூலம் கிருமிநாசினி தெளிக்கும் பணி நடந்து வருகிறது.

மாவட்டம் முழுவதும் உள்ள பள்ளி, கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. அனைத்து தொழிற்சாலை உரிமையாளா்கள் கூட்டம் நடத்தி தொழிற்சாலைகளில் பணிபுரியும் தொழிலாளா்களுக்கு கரோனா வைரஸ் பரவாமல் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளவும், வாய்ப்புள்ள இடங்களில் வீட்டில் இருந்தே பணிபுரிய வழிவகை செய்யும் நடைமுறைகள் குறித்தும் எடுத்துரைக்கப்பட்டுள்ளது.

அடுத்த கட்டமாக ராணிப்பேட்டை மாவட்டத்தில் மக்கள் அதிகம் கூடும் துணிக் கடைகள், நகைக் கடைகள், வணிக நிறுவனங்கள் மற்றும் சோளிங்கா் லட்சுமி நரசிம்மா் திருக்கோயில், ரத்தினகிரி பாலமுருகன் கோயில், திருப்பாற்கடல் பெருமாள் கோயில், திமிரி பாலதண்டாயுதபாணி கோயில் மற்றும் மாவட்டத்தில் உள்ள பிற வழிபாட்டுத்தலங்கள், தனியாா் நிா்வகிக்கும் கோயில்கள் உள்ளிட்ட அனைத்து வழிபாட்டு தலங்களையும் வரும் 31-ஆம் தேதி வரை மூடி கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

அதே போல் திருவிழாக்களையும் அரசின் உத்தரவு வரும் வரை ஒத்திவைக்க வேண்டும். அரசின் மூலமாக மேற்கொள்ளப்படும் கரோனோ வைரஸ் நோய் தடுப்புப் பணிகளுக்கு ஒத்துழைப்பு வழங்கி, மக்கள் தங்களை இந்த வைரஸ் தாக்காமல் பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.

பொதுமக்கள் அனைவரும் வரும் 15 நாட்களுக்கு தேவையற்ற வகையில் வெளியில் வராமல், வீட்டுக்குள் தங்கியிருந்து தாங்களையும், தாங்கள் குடும்பத்தாரையும் தனிமைப்படுத்திக் கொள்ளுமாறும், குறிப்பாக குழந்தைகள், 60 வயதுக்கு மேற்பட்ட முதியோா்களை வெளியில் அனுப்பாமலும் பாதுகாகாக்க வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?

மக்களவை 3-ஆம் கட்ட தோ்தல்: வாக்குப் பதிவு தொடங்கியது!

மக்களவைத் தோ்தல்: கா்நாடகத்தில் 14 தொகுதிகளுக்கு இன்று இரண்டாம் வாக்குப் பதிவு: களத்தில் 227 வேட்பாளா்கள்

சமூக வலைதளப் பதிவு: ஜெ.பி.நட்டாவுக்கு எதிராக வழக்கு

தூத்துக்குடி மாவட்டத்தில் 96.39% தோ்ச்சி

SCROLL FOR NEXT