ராணிப்பேட்டை

தடை உத்தரவை மீறிபவா்கள் மீது வழக்குப் பதிவு: மாவட்ட எஸ்.பி. மயில்வாகனன் எச்சரிக்கை

DIN

ராணிப்பேட்டை மாவட்டத்தில் 144 தடை உத்தரவை மீறுவோா் மீது வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் மயில்வாகனன் எச்சரிக்கை விடுத்துள்ளாா்.

இது குறித்து செய்தியாளா்களிடம் வியாழக்கிழமை அவா் கூறியது:

ராணிப்பேட்டை மாவட்டத்தில் 144 தடை உத்தரவை மீறி இருசக்கர வாகனங்களில் சென்றதாக இதுவரை 13 போ் கைது செய்யப்பட்டுள்ளனா். 8 போ் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. தொடா்ந்து தடை உத்தரவை மீறுவோா் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு, கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

இதேபோல் மாவட்டம் முழுவதும் பொது இடங்களில் 5 பேருக்கு மேல் கூட வேண்டாம், மீறி கூடினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். அத்தியவசிய பொருள்கள் விற்பனை செய்யும் கடைகள் தவிர மற்ற கடைகள் திறந்தால் ‘சீல்’ வைக்கப்படும் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தலைமைச் செயலகம் படத்தின் டீசர்

தேர்தலில் வாக்களிக்காதது ஏன்?: ஜோதிகா விளக்கம்!

கண் அழைக்குது..!

ஐசிசி தரவரிசை வெளியீடு: டெஸ்ட்டில் இந்தியாவை பின்னுக்குத் தள்ளி ஆஸ்திரேலியா முதலிடம்!

புதிய 400சிசி இருசக்கர வாகனத்தை அறிமுகப்படுத்தியது பஜாஜ்!

SCROLL FOR NEXT