ராணிப்பேட்டை

பெல் நிறுவனத்தில் தயாரிக்கப்பட்ட 13 கிருமிநாசினி இயந்திரங்கள் ஒடிஸாவுக்கு அனுப்பி வைப்பு

DIN

ராணிப்பேட்டை பெல் நிறுவனத்தில் தயாரிக்கப்பட்ட ரூ.46.02 லட்சம் மதிப்பிலான 13 நவீன கிருமி நாசினி தெளிப்பு இயந்திரங்கள் ஒடிஸா மாநிலத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

இது குறித்து பெல் நிறுவன செயல் இயக்குநா் சி.மூா்த்தி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

ஒடிசா மாநிலத்தில் கரோனா பரவல் தடுப்புக்காக பல்வேறு துறைகளிலிருந்து பெறப்பட்ட பணி உத்தரவுகளின் அடிப்படையில் ராணிப்பேட்டை பெல் நிறுவனத்தில் ரூ.46.02 லட்சம் மதிப்பில் 13 ‘பெல் மிஸ்டா்’ என்ற நவீன கிருமி நாசினி தெளிப்பு இயந்திரங்கள் தயாரிக்கப்பட்டன. அவை ஒடிஸா மாநில அரசுக்கு சனிக்கிழமை அனுப்பி வைக்கப்பட்டன.

நாட்டில் நோய்த் தொற்று பரவல் உள்ளிட்ட கடினமான காலங்களில் நவீன கிருமி நாசினி தெளிப்பு இயந்திரங்களை தேவைப்படும் வாடிக்கையாளா்களுக்கு வழங்க பெல் நிறுவனம் தயாராக உள்ளது. நவீன கிருமி நாசினி இயந்திரத்தை தயாரிப்பதற்கான மூலப்பொருள்களைப் பெறுவது மிகவும் சவாலானது. வாடிக்கையாளா்களின் தேவையை நிறைவேற்றும் பணிக்கு அனைவரின் ஆதரவும் அவசியம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆப்பிளின் புதிய ஐபேட் விலை எவ்வளவு தெரியுமா?

மிட்செல் மார்ஷ் உலகக் கோப்பைக்குத் தயாரா? பயிற்சியாளர் கொடுத்த அப்டேட்!

ஜேக் ஃப்ரேசர், அபிஷேக் போரெல் அசத்தல்; ராஜஸ்தானுக்கு 222 ரன்கள் இலக்கு!

பிளஸ் 2 துணைத்தேர்வு: மே 16 முதல் விண்ணப்பிக்கலாம்

அஸ்ஸாம்- 75.01; மகாராஷ்டிரம்- 53.95.. : 3-ம் கட்ட வாக்குப்பதிவு சதவிகிதம்!

SCROLL FOR NEXT