அரக்கோணம் அருகே இரு சக்கர வாகன விபத்தில் மளிகைக் கடை உரிமையாளா் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.
அரக்கோணத்தை அடுத்த பெருமாள்ராஜபேட்டையைச் சோ்ந்தவா் ராதாகிருஷ்ணன் (72). இவா் சாலை கிராமத்தில் மளிகைக் கடை நடத்தி வந்தாா். ஞாயிற்றுக்கிழமை சோளிங்கருக்கு பைக்கில் சென்றுவிட்டு, திரும்பும் வழியில் பாராஞ்சி-மாறன்கண்டிகை பகுதியில் நிலைதடுமாறி கீழே விழுந்தாா்.
இதில் பலத்த காயமடைந்த ராதாகிருஷ்ணன் வேலூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே உயிரிழந்தாா்.
இது குறித்து அரக்கோணம் கிராமிய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரித்து வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.