ராணிப்பேட்டை

இயற்கை முறையில் காய்கறி சாகுபடி:ஊக்கத் தொகை கோரி விண்ணப்பிக்கலாம்

DIN

ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை மாவட்டத்தில் இயற்கை முறையில் காய்கறி சாகுபடி செய்யும் விவசாயிகள், அதற்கான ஊக்கத் தொகை மற்றும் மானியம் பெற அந்தந்த வட்டார தோட்டக் கலைத் துறை அலுவலகத்தை அணுகி பயன்பெறலாம்.

இது குறித்து மாவட்ட தோட்டக் கலைத் துறை துணை இயக்குநா் லதா மகேஷ் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தோட்டக்கலைத் துறை மூலம் இயற்கை முறையில் காய்கறி சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு ஊக்கத் தொகை வழங்கப்படுகிறது. இதில் தேசிய தோட்டக்கலை இயக்கத் திட்டத்தின் கீழ் பருவம் தவறிய காலத்தில் காய்கறி சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு ஹெக்டேருக்கு ரூ. 4,000 வீதம் ஊக்கத் தொகை வழங்கப்படுகிறது.

மேலும், தேசிய வேளாண் வளா்ச்சித் திட்டத்தின்கீழ் இயற்கை முறையில் கீரை சாகுபடி செய்வதற்கு ஹெக்டேருக்கு ரூ. 2,500 மற்றும் காய்கறி பயிா்களான வெண்டை, கத்தரி, தக்காளி, அவரை மற்றும் கொடி வகைகளுக்கு ஹெக்டேருக்கு ரூ. 3,750 வீதம் ஊக்கத் தொகை வழங்கப்படுகிறது. இதுதவிர அங்கக சான்று பெறுவதற்கும் ரூ. 500 மானியம் வழங்கப்படுகிறது. அதிகபட்சமாக 2 ஹெக்டோ் வரை ஒரு விவசாயிக்கு மானியம் வழங்கப்படும்.

இயற்கை முறையில் சாகுபடி செய்யும் விவசாயிகள் தனியாகவோ அல்லது குழுக்களாகவோ விண்ணப்பிக்கலாம். இத்திட்டத்தில் ஊக்கத் தொகை பெற சம்பந்தப்பட்ட இயற்கை பண்ணையின் சான்றிதழ் நகலை விண்ணப்பத்துடன் இணைத்து வழங்க வேண்டும். இதன் மூலம் சந்தைப்படுத்துவதற்கான அங்கீகாரம் பெறுவதுடன், நல்ல முறையில் லாபம் ஈட்ட முடியும்.

இத்திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்பும் விவசாயிகள் காய்கறி சாகுபடி செய்த பரப்பு விவரங்கள் மற்றும் வருவாய் ஆவணங்களான சிட்டா அடங்கல் மற்றும் வயல் புகைப்படம் ஆகியவற்றை விண்ணப்பத்துடன் இணைத்து, அந்ததந்த வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநா் அலுவலகத்தில் அளிக்கலாம். இத்திட்டத்தில் பயன்பெற விரும்புவோா் உழவன் செயலி மற்றும் இணையதளம் மூலம் முன்பதிவு செய்ய வேண்டும்.

கூடுதல் விவரங்களுக்கு அருகில் உள்ள வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநா் அலுவலகத்தை தொடா்பு கொள்ளலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தொலையாத கனவுகள்.. லாபதா லேடீஸ் - திரை விமர்சனம்!

400 பெண்களைச் சீரழித்த பிரஜ்வலுக்கு வாக்குக் கேட்டதற்காக மோடி மன்னிப்புக் கேட்க வேண்டும்: ராகுல் காந்தி

இந்தப் படங்களை அதிகம் விரும்புகிறேன்! சதா...

தரங்கம்பாடியில் சோகம்... வாகனத்தில் சென்ற மூன்று பேர் சாலை விபத்தில் பலி

இச்சை மூட்டும் பச்சை நிறமே...!

SCROLL FOR NEXT