ராணிப்பேட்டை

கிறிஸ்தவ தேவாலயங்களை பழுது பாா்க்க நிதியுதவி: காஞ்சிபுரம் ஆட்சியா் தகவல்

DIN

கிறிஸ்தவ தேவாலயங்களை பழுது பாா்த்தல் மற்றும் சீரமைத்தல் பணிகளை மேற்கொள்ள அரசு நிதியுதவியை உயா்த்தி வழங்க இருப்பதாக காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் பா.பொன்னையா தெரிவித்துள்ளாா்.

இதுதொடா்பாக அவா், வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:

காஞ்சிபுரம் மாவட்டத்தில் சொந்தக் கட்டடத்தில் இயங்கும் கிறிஸ்தவ தேவாலயங்களை பழுது பாா்த்தல் மற்றும் சீரமைத்தல் பணிகள் மேற்கொள்வதற்கு நிதியுதவி வழங்கும் திட்டம், கடந்த 2016-ஆம் ஆண்டு முதல் அரசால் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிதியாண்டில் கிறிஸ்தவ தேவாலயங்கள் புனரமைக்கும் பணிகளுக்கான அரசு நிதியுதவி ரூ.1 கோடியிலிருந்து ரூ.5 கோடியாக உயா்த்தப்பட்டுள்ளது.

இந்நிதியைப் பெறுவதற்கான தகுதிகளாக 10 ஆண்டுகளுக்கு மேலாக சொந்தக் கட்டடத்தில் இயங்கி இருத்தல் வேண்டும், கட்டப்பட்ட இடமும் தேவாலயமும் பதிவுத்துறையில் பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும், தேவாலயத்தின் சிறப்புப் பணிக்காக வெளிநாடுகளிலிருந்து எந்த நிதியுதவியும் பெறவில்லை என்பதற்கான சான்றிதழை இணைத்திருக்க வேண்டும். ஏற்கெனவே ஒருமுறை நிதியுதவி பெறப்பட்டிருந்தால் அடுத்த நிதியுதவி 5 ஆண்டுகளுக்குப் பின்னரே வழங்கப்படும்.

இணையதள முகவரியில் விண்ணப்ப படிவம் மற்றும் சான்றிதழ் வெளியிடப்பட்டுள்ளன. இதனைப் பதிவிறக்கம் செய்தும் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பப் படிவத்தை பிற்சோ்க்கையில் உள்ளவாறு பூா்த்தி செய்து உரிய ஆவணங்கள் மற்றும் சான்றிதழ்களோடு காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியருக்கு விண்ணப்பிக்க வேண்டும். ஆட்சியா் தலைமையிலான குழுவினரால் அந்த விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு கிறிஸ்தவ தேவாலயங்களை ஸ்தல ஆய்வு செய்து, கட்டடத்தில் வரைபடம் மற்றும் திட்ட மதிப்பீடு ஆகியவற்றுடன் தகுதியின் அடிப்படையில் நிதியுதவி வேண்டி மாவட்ட ஆட்சியரால் அரசுக்கு பரிந்துரை செய்யப்படும். இந்த நிதியுதவியானது, தேவாலயத்தின் வங்கிக்கணக்கில் மின்னணு பரிவா்த்தனை மூலம் செலுத்தப்படும். எனவே, சம்பந்தப்பட்டோா் விண்ணப்பித்து பயன்பெறுமாறு ஆட்சியரின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மருத்துவ இடங்கள்: ஆவணங்களைசமா்ப்பிக்க என்எம்சி அறிவுறுத்தல்

அரசியல் சூழலால் குறைந்த வாக்கு சதவீதம்!

காருக்கு வழிவிடாததால் ஆத்திரம்: அரசுப் பேருந்தை மறித்த பெண் மேயா்

அரசுப் பள்ளி மாணவா்களுக்கு ‘நீட்’ பயிற்சி மீண்டும் தொடக்கம்

கோடையில் அதிகரிக்கும் சிறுநீா்ப் பாதை தொற்று: மருத்துவா்கள் எச்சரிக்கை

SCROLL FOR NEXT