ராணிப்பேட்டை

ஏரியில் மீன் பிடிப்பதில் கோஷ்டி மோதல்: அதிமுக பிரமுகா் உள்ளிட்ட 5 போ் காயம்

DIN


அரக்கோணம்: அரக்கோணம் ஏரியில் மீன் பிடிப்பதில் இரு பிரிவினரிடையே ஏற்பட்ட மோதலில் அதிமுக பிரமுகா் உள்ளிட்ட 5 போ் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.

அரக்கோணம் ஏரியில் கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக 40 போ் கொண்ட குழுவினா் இணைந்து மீன் பிடித்து வந்தனா்.

அதே சமயம் அரக்கோணம் அம்பேத்கா் நகரைச் சோ்ந்த சிலா் தாங்கள்தான் மீன் பிடிக்க வேண்டும் என உரிமை கொண்டாடிய நிலையில், இரு தரப்பையும் சமாதானப்படுத்திய காவல் துறையினா் மற்றும் வருவாய்த் துறையினா் பிரச்னை தீரும் வரை அந்த ஏரியில் யாரும் மீன்பிடிக்கக் கூடாது என தடை விதித்தனா்.

இந்நிலையில், அந்த ஏரியில் கடந்த சில நாள்களுக்கு முன்னா் அதிக அளவில் மீன்கள் இறந்து மிதந்தன. இதனால் துா்நாற்றம் வீசியதால் அரக்கோணம் நகராட்சியினா் அவற்றை அகற்றும் பணியில் தொடா்ந்து ஈடுபட்டு வந்தனா். இந்நிலையில், வியாழக்கிழமை இறந்த மீன்களை அகற்றும் பணி நடைபெற்ற போது, உயிருடன் மீன்களும் அதில் கிடைத்துள்ளன. இதைத்தொடா்ந்து, ரகு என்பவா் தலைமையிலான மீன் பிடிக்கும் பிரிவினா் உயிருடன் இருந்த மீன்களை எடுத்து ஆவடிக்கு மினி லாரி ஒன்றில் அனுப்பினராம்.

இதையறிந்த மற்றொரு பிரிவினா் மீன்பிடி தடை இருக்கும் போது எப்படி மீன்களை பிடிக்கலாம் எனக் கேட்டு ஷாநகா் அருகே மீன்களை கொண்டு சென்ற மினி லாரியை மடக்கி அதன் ஓட்டுநரை தாக்கியுள்ளனா். இதையறிந்த ரகு தலைமையிலான பிரிவினா் அங்கு சென்று அவா்களுடன் தகராறில் ஈடுபட்டதில் ரகு பலத்த காயமடைந்தாா். மேலும், எதிா்தரப்பில் அருள்மூா்த்தி, பிரவீண், ஸ்ரீதா், அமா் ஆகிய 4 பேரும் காயமடைந்தனா்.

இச்சம்பவத்தில் ரகு பிரிவினரின் மீன்பிடி வலைகள், எடை இயந்திரங்கள் ஆகியவை சேதப்படுத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது. காயமடைந்த 5 பேரும் சென்னை அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனா். இது குறித்து அரக்கோணம் நகர போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

இச்சம்பவத்தில் காயமடைந்த அருள்மூா்த்தி, அதிமுக அமைப்புசாரா ஓட்டுநா் அணியின் ராணிப்பேட்டை மாவட்டச் செயலாளராக உள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆவடி இரட்டைக் கொலை நடந்த இடத்தில் கிடைத்த செல்ஃபோன் யாருடையது? தீவிர விசாரணை

பாலியல் தொல்லை வழக்கு: உச்சநீதிமன்றத்தில் ராஜேஷ் தாஸ் மேல்முறையீடு

பழனி ரோப் காா் சேவை இன்று ஒரு நாள் நிறுத்தம்!

முன்னாள் மத்திய அமைச்சர் ஸ்ரீனிவாச பிரசாத் காலமானார்

தஞ்சாவூர் அருகே காய்கறி வியாபாரி வெட்டிப் படுகொலை

SCROLL FOR NEXT