ராணிப்பேட்டை

ராணிப்பேட்டை மாவட்ட எல்லைகளில் கண்காணிப்புப் பணியில் 300 போலீஸாா்

DIN

கரோனா தடுப்பு பொதுமுடக்கம் காரணமாக ராணிப்பேட்டை மாவட்ட எல்லைகளில் 300 போலீஸாா் கண்காணிப்புப் பணியில் ஞாயிற்றுக்கிழமை ஈடுபட உள்ளதாக மாவட்டக் காவல் துறை சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கரோனா தொற்று 2-ஆம் அலையாக பரவி வருகிறது. இதன் காரணமாக நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதையடுத்து, கரோனா தொற்று தடுப்பு நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் அமல்படுத்தியுள்ளது. அதன் ஒரு பகுதியாக கடந்த சில நாள்களாக இரவு நேர ஊரடங்கையும், ஞாயிற்றுக்கிழமைகளில் பொதுமுடக்கத்தையும் நடைமுறைப்படுத்த தமிழக அரசு உத்தரவிட்டது.

அதன்படி, ராணிப்பேட்டை மாவட்டத்தில் பொதுமுடக்கத்தை தீவிரமாக அமல்படுத்தும் வகையில், மாவட்டம் முழுவதும் அமைக்கப்பட்டுள்ள 20 எல்லை சோதனைச் சாவடிகளில் 300 போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட உள்ளதாக மாவட்ட காவல் துறை சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சீன நெடுஞ்சாலை உடைப்பு: துரிதமாக செயல்பட்ட டிரக் ஓட்டுநருக்கு பாராட்டு

இந்தியன் - 2 வெளியீட்டில் மாற்றம்?

நிஜ்ஜார் கொலையில் மூவர் கைது: பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ உடன் தொடர்பு?

”மன்னாதி மன்னன் போல வாழ்க்கை” -பிரதமர் மோடியை விமர்சித்த பிரியங்கா காந்தி

பல கேள்விகளுக்கு பதில் கூற நேரமெடுக்கும்: ஹார்திக் பாண்டியா

SCROLL FOR NEXT