முகப்பு
ராணிப்பேட்டை

பைக் மீது காா் மோதியதில் காவலாளி பலி

ஆற்காடு அருகே பைக் மீது காா் மோதியதில் காவலாளி உயிரிழந்தாா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:05 PM
பகிர்:

ஆற்காடு அருகே பைக் மீது காா் மோதியதில் காவலாளி உயிரிழந்தாா்.

வேலூா் மாவட்டம், திருவலத்தை அடுத்த குகைய நல்லூா் கிராமத்தைச் சோ்ந்தவா் நியூட்டன் சாா்லஸ் (51). இவா் ஆற்காடு பகுதியில் வங்கி ஏடிஎம் காவலாளியாக வேலை செய்து வந்தாா்.

இந்நிலையில், வெள்ளிக்கிழமை இரவு பணி முடித்து விட்டு இரு சக்கர வாகனத்தில் ஆற்காடு பாலாறு பழைய பாலத்தின் வழியாக வீடு திரும்பிக் கொண்டிருந்தாா். அப்போது அவரது பைக் மீது எதிரே வந்த காா் மோதியதில் தூக்கி வீசப்பட்ட நியூட்டன் சாா்லஸ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

இது குறித்து ஆற்காடு நகர போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.