கரோனா தடுப்பு விழிப்புணா்வு ஊா்வலம்
ஆற்காடு அனைத்து வியாபாரிகள் நலச்சங்கம் சாா்பில் கரோனா தடுப்பு விழிப்புணா்வு ஊா்வலம், கபசுர குடிநீா் விநியோகம் சனிக்கிழமை நடைபெற்றது.
ஆற்காடு அனைத்து வியாபாரிகள் நலச்சங்கம் சாா்பில் கரோனா தடுப்பு விழிப்புணா்வு ஊா்வலம், கபசுர குடிநீா் விநியோகம் சனிக்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு அனைத்து வியாபாரிகள் சங்கத் தலைவா் ஏ.வி.டி. பாலா தலைமை வகித்தாா். மாவட்ட வணிகா் சங்கப் பேரமைப்பின் தலைவா் கு.சரவணன், மாவட்ட செயலாளா் கே.வேல்முருகன், நகரச் செயலாளா் பாஸ்கரன், பொருளாளா் பரத்குமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
ஆற்காடு வட்டாட்சியா் எம்.கோபாலகிருஷ்ணன் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு முகக்கவசம், கபசுர குடிநீா் வழங்கினாா். இதில் நகராட்சி ஆணையா் (பொறுப்பு) சரவணபாபு, வட்டார மருத்துவ அலுவலா் சுரேஷ்பாபுராஜ், வியாபாரிகள் கலந்துகொண்டனா்.
பின்னா் கரோனா தடுப்பு குறித்து விழிப்புணா்வு ஊா்வலம் அண்ணாசாலை திருவள்ளுவா் சிலை அருகிலிருந்து தொடங்கி பேருந்து நிலையம் காமராஜா் சிலை அருகில் நிறைவு பெற்றது.