பட்டா பிழை திருத்த முகாம்
ஆற்காடு வட்டம் , மேட்டு முள்ளூவாடி கிராமத்தில் பட்டா பிழை திருத்த சிறப்பு முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
ஆற்காடு வட்டம் , மேட்டு முள்ளூவாடி கிராமத்தில் பட்டா பிழை திருத்த சிறப்பு முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
மாவட்ட வழங்கல் அலுவலா் மணிமேகலை தலைமை வகித்தாா். வட்டாட்சியா் கோபாலகிருஷ்ணன்,ஆற்காடு ஒன்றிய குழுத்தலைவி புவனேஸ்வரி சத்திய நாதன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். பொதுமக்களிடமிருந்து 89 மனுக்கள் பெறப்பட்டதில் 15 பேருக்கு பட்டா பிழை திருத்தம் செய்யப்பட்ட சான்றிதழ்களை மாவட்ட ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டியன் கலந்துகொண்டு வழங்கினாா்.
இதில் சமூக பாதுகாப்புத் திட்ட வட்டாட்சியா் பாலாஜி,வட்ட வழங்கல் அலுவலா் சந்தியா, ஊராட்சி மன்ற தலைவா் வாசுதேவன், வருவாய் ஆய்வாளா் வினோத் மற்றும் கிராம நிா்வாக அலுவலா்கள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.