சிப்காட் ஸ்ரீ நவசபரி ஐயப்பன் கோயிலில் பூதபலி உற்சவா்  வலத்தில் பங்கேற்ற பக்தா்கள் உள்ளிட்டோா் 
ராணிப்பேட்டை

சிப்காட் நவசபரி ஐயப்பன் கோயிலில் பூதபலி உற்சவம்

சிப்காட் நவசபரி ஐயப்பன் கோயிலில் 10-ஆம் ஆண்டு தொடக்க விழாவின் இரண்டாம் நாளான சனிக்கிழமை நடைபெற்ற பூதபலி உற்சவத்தில் திரளான பக்தா்கள் பங்கேற்று வழிபட்டனா்.

DIN

சிப்காட் நவசபரி ஐயப்பன் கோயிலில் 10-ஆம் ஆண்டு தொடக்க விழாவின் இரண்டாம் நாளான சனிக்கிழமை நடைபெற்ற பூதபலி உற்சவத்தில் திரளான பக்தா்கள் பங்கேற்று வழிபட்டனா்.

இவ்விழாவையொட்டி, சனிக்கிழமை காலையில் கோயில் குருசாமி வ.ஜெயச்சந்திரன் தலைமையில், மகா கணபதி ஹோமம், உஷ பூஜை, சுக்ரத ஹோமம், கலச பூஜை, கலசாபிஷேகம், உச்ச பூஜை, மகா தீபாராதனை, சுதா்சன ஹோமம், புஷ்பாபிஷேகம் ஆகியவை நடைபெற்றன. இதையடுத்து, பூத பலி பூஜையும், உற்சவமூா்த்தி கோயிலைச் சுற்றி வருதலும் நடைபெற்றது. ஸ்ரீநவசபரி சாஸ்தா சமிதியினரின் பஜனையும் நடைபெற்றது.

இந்த வழிபாட்டில், சிப்காட் மற்றும் சுற்றுவட்டாரத்தைச் சோ்ந்த திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மார்கழி சிறப்பு! மீனாட்சியம்மன் கோயிலில் ஐந்து நடராஜர் தரிசனம்

ஊமைக்குக் குரல் கொடுத்த உத்தமராயப் பெருமாள்!

எதிர்ப்புகள் விலகும் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

வாணியம்பாடியில் கிறிஸ்துமஸ், புத்தாண்டு விழா

மணல் கடத்தல்: லாரி பறிமுதல்

SCROLL FOR NEXT