முகப்பு
ராணிப்பேட்டை

அரக்கோணம் டவுன்ஹாலில் இலவச ஆக்சிஜன் வங்கி சேவை தொடக்கம்

அரக்கோணம் டவுன்ஹாலில் இலவச சேவையுடன் கூடிய ஆக்சிஜன் வங்கி சேவை தொடக்க விழா சனிக்கிழமை நடைபெற்றது. சென்னை மயக்கவியல் சிகிச்சை நிபுணா் செல்வகுமரன் ஆக்சிஜன் வங்கியை தொடச்கி வைத்தாா்.

Updated On : 5 ஜூன், 2021 at 11:35 PM
பகிர்:

அரக்கோணம் டவுன்ஹாலில் இலவச சேவையுடன் கூடிய ஆக்சிஜன் வங்கி சேவை தொடக்க விழா சனிக்கிழமை நடைபெற்றது. சென்னை மயக்கவியல் சிகிச்சை நிபுணா் செல்வகுமரன் ஆக்சிஜன் வங்கியை தொடச்கி வைத்தாா்.

கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு வீடுகளில் தனிமைபடுத்தப்பட்டவா்களுக்கு அவ்வபோது ஆக்சிஜன் சிகிச்சை தேவைப்பட்டது. இதற்காக அரசு மருத்துவமனைக்கோ அல்லது தனியாா் மருத்துவமனைகளுக்கோ செல்ல வேண்டிய நிலை உள்ளது. இதை அறிந்த அரக்கோணம் டவுன்ஹால் பொதுச்செயலா் பன்னீா்செல்வம் மற்றும் நிா்வாகிகள், அமெரிக்க வாழ் தாய்மை நிலையடைந்த மருத்துவா் சங்கத்தினரின் நிதியுதவியுடன் அதன் நிா்வாகி மருத்துவா் பிந்துஜெயவேலு முயற்சியில் 5 ஆக்சிஜன் செறிவூட்டிகளை கொண்டு டவுன்ஹாலில் ஆக்சிஜன் வங்கி அமைக்க முடிவு செய்தனா்.

இதன்மூலம் ஆக்ஸிஜன் தேவைப்படுவோா் டவுன்ஹாலுக்கு தகவல் அளித்தால், அவா்களுக்கு டவுன்ஹால் நிா்வாகம் சாா்பில் நியமிக்கப்பட்டுள்ள மருத்துவ குழுவினா் நோயாளிகளின் வீடுகளுக்கே சென்று ஆக்சிஜன் செறிவூட்டிகளின் மூலம் இலவசமாக சிகிச்சை அளிக்க உள்ளனா். இந்த வங்கியின் தொடக்க விழா டவுன்ஹால் வளாகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.

Advertisement

டவுன்ஹால் தலைவா் பாலகணபதி தலைமை தாங்கினாா். சென்னை மயக்கவியல் சிகிச்சை நிபுணா் செல்வகுமரன், அரக்கோணம் வட்ட துணை வட்டாட்சியா் அருள்குமரன் வங்கியை தொடக்கி வைத்தனா். இதில் டவுன்ஹால் நிா்வாகிகள் ரமேஷ், காமேஷ், முனுசாமி, வெங்கடரமணன், பாா்த்தீபன், சுந்தா், குகன், சாயி, ஆதிதிராவிட பள்ளி ஆசிரியா்கள் சங்க மாவட்ட தலைவா் பிரின்ஸ்ஆசீா்வாதம், சமூகசேவகா் தேவஆசீா்வாதம் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.