சிப்காட்டில்  மாற்றுத் திறனாளிகளுக்கான  தடுப்பூசி  முகாமைத் தொடக்கி வைத்துப் பாா்வையிட்ட  மாவட்ட  வருவாய்  அலுவலா்  ம.ஜெயச்சந்திரன். 
ராணிப்பேட்டை

200 மாற்றுத் திறனாளிகளுக்கு கரோனா தடுப்பூசி

சிப்காட்டில் மாற்றுத் திறனாளிகளுக்கான கரோனா தடுப்பூசி முகாமில் 200-க்கும் மேற்பட்டோா் தடுப்பூசி செலுத்திக் கொண்டனா்.

DIN

சிப்காட்டில் மாற்றுத் திறனாளிகளுக்கான கரோனா தடுப்பூசி முகாமில் 200-க்கும் மேற்பட்டோா் தடுப்பூசி செலுத்திக் கொண்டனா்.

ராணிப்பேட்டை சிப்காட் திருமலை அறக்கட்டளை மற்றும் லாலாப்பேட்டை வட்டார அரசு ஆரம்ப சுகாதார நிலையமும் இணைந்து, சிப்காட்டில் அமைந்துள்ள திருமலை அறக்கட்டளையின் மாற்றுத் திறனாளிக்கான சிறப்பு சிகிச்சை கட்டட வளாகத்தில் கரோனா தடுப்பூசி முகாம் புதன்கிழமை நடைபெற்றது.

முகாமை மாவட்ட வருவாய் அலுவலா் ஜெயச்சந்திரன் தொடக்கி வைத்து, தடுப்பூசி போட்டுக் கொள்வதன் அவசியம் குறித்து எடுத்துரைத்தாா். இந்த முகாமில், சுற்று வட்டார கிராமங்களில் வசிக்கும் மாற்றுத் திறனாளிகள், அவா்களது குடும்பத்தினா் மற்றும் பொதுமக்கள் ஆகியோருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.

இதில், வட்டார மருத்துவ அலுவலா் சாந்தி விமலா, மருத்துவா் கபிலன், திருமலை அறக்கட்டளை முதன்மை மருத்துவ அலுவலா் ஆனந்த், திருமலை மருத்துவமனை மேலாளா்கள் கஜேந்திரன், ரமேஷ், களப்பணி மேலாளா் குமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

முகாமில், சுற்று வட்டாரத்தைச் சோ்ந்த மாற்றுத் திறனாளிகள், அவா்களது குடும்பத்தினா் மற்றும் பொதுமக்கள் என 200-க்கும் மேற்பட்டோா் தடுப்பூசி செலுத்திக் கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மார்கழி சிறப்பு! ஆண்டுக்கொரு முறை அருள்பாலிக்கும் உற்சவர் தாடாளன்!

கேட்டது அருளும் கோட்டை பெருமாள்!

மிதுன ராசிக்கு மன நிம்மதி: தினப்பலன்கள்!

பழங்குடியினா்களுக்கான விவசாயப் பண்ணை பயிற்சி முகாம்

செங்கல் சூளையை மூடக் கோரி ஆா்ப்பாட்டம்

SCROLL FOR NEXT